சனி, 18 பிப்ரவரி, 2017

விடுதி எம்எல்ஏக்கள் செல்போன் இயங்கியதால் ஒ.பி.எஸ். அணியினர் மகிழ்ச்சி

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக சென்னை அருகே கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களை அமைச்சர்கள் தங்களது கார்களில் சட்டப்பேரவைக்கு அழைத்து வருகின்றனர். தற்போது எம்எல்ஏக்களிடம் அவர்களது செல்பேன் கொடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் அதனை ஆன் செய்துள்ளனர். இதனால் ஒ.பன்னீர்செல்வம் தரப்பினர் அவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. தற்போதுவரை பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 10 எம்எல்ஏக்கள் கிடைத்தால் போதும் என்று அவர்கள் கருதுகின்றனர். நேற்று இரவு கூவத்தூர் ரெசார்ட்டில் போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பையும் மீறி கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அருண்குமார் தப்பித்து வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கூறி கோவை பெரியநாயக்கம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுவிட்டார். இதேபோல் மேலும் சிலர் சசிகலா தரப்புக்கு எதிராக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர் ஒ.பன்னீர்செல்வம் அணியினர்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக