திங்கள், 27 பிப்ரவரி, 2017

சிவசேனா இஸ்லாமிய வாக்குகளையும் பெற்று உள்ளது ...


மின்னம்பலம். இந்துத்வா சித்தாந்தத்தை பின் தொடரும் சிவ சேனா கட்சி, இஸ்லாமிய வாக்குகளையும் வென்றிருக்கிறது.
மேலும், சிவ சேனா கட்சி தங்களுடைய உண்மையான நலம் விரும்பிகள் என பாண்ட்ரா மற்றும் ஜோகேஸ்வரி பகுதியில் வென்ற இரண்டு இஸ்லாமிய வேட்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். பாண்ட்ராவில் வெற்றி பெற்ற 35 வயதான சிவ சேனா வேட்பாளர் ஹஜி ஹலிம் கான், சிவ சேனா ’இஸ்லாமிய எதிர்ப்பு கட்சி’யாக உருவகிக்கப்படுவதற்கு மக்களில் சில பிரிவினரே காரணம் என தெரிவித்தார்.

“ பாலா சாகேப் தாக்கரே உதவி செய்த பிறகு தான் எங்கள் முக்கியமான மசூதி ஒன்று கட்ட முடிந்தது” என்று அவர் கூறினார்.இதுவரை காங்கிரஸின் கையில் இருந்த இஸ்லாமிய பெரும்பான்மை வார்டான பாண்ட்ரா தற்போது இவர் காரணமாக சிவ சேனாவில் கையில் வந்திருக்கிறது. இஸ்லாமிய மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியதாக இவர் காங்கிரஸை குற்றம் சாட்டினார், “ காங்கிரஸ் இஸ்லாமிய சமூகத்தை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. ஆனால் சிவ சேனா ஒவ்வொரு இஸ்லாமியரையும் நாட்டிற்கு உண்மையாக இருக்க வலுயுறுத்துகிறது. பாலாசாகேப் எப்போதுமே ‘உண்மையான இஸ்லாமியரை’ பாராட்டியிருக்கிறார்” என்று இவர் பேசியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக