வியாழன், 23 பிப்ரவரி, 2017

நெடுவாசல் நோக்கி .. ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டதை எதிர்க்கும் பேரணி!

Add caption
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள காவேரி கரையோரக் கிராமம் நெடுவாசல். இங்கு காவரி பாசனத்திலும் ஆழ்குழாய் பாசனத்திலும் நெல், வாழை, கரும்பு, கடலை, தென்னை, பலா போன்ற விவசாயம் செழித்துள்ள கிராமம். இந்த கிராமத்தில் தான் விவசாயத்தை அழித்து ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கர்நாடக மாஜி பாஜக எம்பியின் ஜெம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பால் கொதிப்படைந்த நெடுவாசல் சுற்றுவட்டார கிராம மக்கள் திட்டத்தை கைவிடக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மக்கள் போராட்டம், மாணவர் போராட்டம், ஐடி ஊழியர்கள் போராட்டம் என்று தமிழகம் முழுவதும் கிளம்பியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அறிக்கை கொடுத்ததுடன் நெடுவாசல் கிராமம் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். புதன் கிழமை காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வானக்கன்காடு கிராமத்தில் பாதுகாப்பின்றி எண்ணெய் வெள்யேறும் இடத்தை பார்த்துவிட்டு நெடுவாசல் சென்று கட்சி பாகுபாடின்றி போராடினார்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றலாம் என்றார். இன்று மாலை இந்திய விவசாயிகள் சங்கம் வரதராஜன் நெடுவாசல் செல்கிறார். பிப் 27 ந் தேதி நாம் தமிழர் கட்சி சீமான் செல்கிறார். அதே போல மதிமுக வைகோ, வி.சி தலைவர் திருமாவளவன் போன்றவர்களும் விரைவில் வர உள்ளனர்.

இந்த நிலையில் 25 ந் தேதி பிரமாண்ட மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இதில் திரை நட்சத்திரங்கள் மற்றும் பல அமைப்பினர் கலந்து கொள்கிறார்கள். இதனால் நெடுவாசல் கிராமம் எந்த நேரத்திலும் பரபரப்பாக உள்ளது. இரா.பகத்சிங் நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக