வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

ஓ.பி.எஸ் - சசிகலா விவகாரம் - சட்டவல்லுநரின் கருத்து!

இன்றைக்கு நடந்து வரும் தமிழக அரசியல் சூழல் அக்கப்போராக தான் உள்ளது. அதிமுக கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள், பொதுமக்கள் வரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த அசாதாரன சூழல். அடுத்து என்ன நிகழுமோ என்று தமிழகமே எதிர்பாத்துக்கொண்டுள்ளது.து குறித்து,
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெனித்தஅலெக்ஸ் நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி. ;
நக்கீரன் : தன்னுடைய பதவி விலகல் கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டது, சசிகலாவின் மிரட்டல் அடிப்படையில் தான் ஒப்படைக்கப்பட்டது, அதை சட்டப்படி திரும்ப பெறுவேன் என்ற ஓ.பி.எஸ்சின்  முயற்சி பலன் தருமா ..
 வழக்கறிஞர் ஜெனிதா : திரும்பப்பெற வாய்ப்பில்லை ....!
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அட்டவணை 3 - ன் கீழ் உள்ள பதவிஏற்பு உறுதிமொழி மூலம் தான் ஆளுநரிடம் பதவியேற்போ, பதவிவிலகலோ செயல்படுத்தப்படுகிறது ..! அந்த பதவி ஏற்ப்பு உறுதிமொழியை ஆளுநர் ஏற்று அரசிதழிலோ அல்லது பொது அறிவிப்பிலோ வெளியிட்டபின்பு பதவி விலகல் திரும்ப பெறுவதென்பது சட்டத்தில் இடமில்லை.


நக்கீரன் : பதவி விலகல் திரும்ப பெற வாய்ப்பில்லை ..? இந்த சூழலில் முதல்வர் சொல்வதை போல மிரட்டியோ அல்லது நெருக்கடியோ கொடுத்து பதவி விலகல் கடிதம் சமர்ப்பிக்க வைக்கப்பட்டிருந்தால் அதற்கு சட்டத்தின் வாயிலாக என்ன தீர்வு ..?

வழக்கறிஞர் ஜெனிதா : முதல்அமைச்சார் பதவி என்பது மாநில நிர்வாக அதிகாரத்தின் ஒரு உச்சம். அந்த உச்சஅதிகாரத்தின் நிர்வாக அலுவலர் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பது இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் அவசியம் ஆகும். அதே நேரத்தில் ஒரு கட்சியின் கீழ் நின்று வெற்றிபெற்றவர் அந்த கட்சியின் தலைமையின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதும் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் அவசியமான ஒன்று தான், ஆயினும் இதில் மேற்சொன்ன செயல்பாட்டினில் ஏதாவது நம்பத்தகுந்த,  சந்தேகங்களுக்கு இடம் அளிக்க கூடிய சட்டவிரோத செயல் ஏதேனும் இருப்பின் ஆளுநர் புகாரை ஏற்று குடியரசுதலைவரை ஆலோசித்து மத்திய புலனாய்வுதுறைக்கு மூலம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கலாம் ...

மேலும் செயல்களை உறுதிபடுத்தினால் ஆளுநர் அதை மாநிலத்தின் அசாதாரண சூழ்நிலையை கருதி குடியரசுதலைவருக்கு பரிந்துரை செய்து இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356 - ன் கீழ் ஆளுநர் ஆட்சியை அமல் படுத்தலாம்.

நக்கீரன் t;முதல்வர் ஓ.பி.எஸ் சொன்னதைபோல மிரட்டல் இல்லாத நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டிருந்தால் அவர் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை பாயும் ..?

வழக்கறிஞர் ஜெனிதா : இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 191 (2) மற்றும் 2(1)(A) அட்டவணை  10 - ன் படி கட்சி தாவல் தடைசட்டம் விதிகள் 1986 பிரிவு 7 - ன் கீழ் அறிவிப்பு அனுப்பி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக்குவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது,  இதற்க்கு சான்றாக ஜி. விஸ்வநாதன் வழக்கு 1996 ஆம் ஆண்டு  வழக்கு பார்வையில் தெளிவாக தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் சொல்லப்பட்டது.;அரவிந்த் நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக