வியாழன், 23 பிப்ரவரி, 2017

ஜெயலலிதாவின் உயில் நாளை வெளியாகிறது? சொத்துக்கள் உரியமுறையில் உறவினர்களிடம்?

அதிமுக பொதுச் செயலாளா் ஜெயலலிதாவிற்கு தன் உடன் இருக்கும் சசிகலா மற்றும் அவரது உறவினா்களை பற்றி நன்கு அறிந்து இருந்தார். அதனால்தான், ஜெயலலிதா கடந்த பல வருடங்களுக்கு முன்னரே உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த உயில் பத்திரிக்கையாளா் சோ.ராமசாமியிடம் இருந்தது. அவா் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த உயில் ஆடிட்டா் குருமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. அவரும் சசியின் கூட்டத்தின் ஆட்டத்திற்கு பயந்து பிரதமா் மோடியிடம் ஒப்படைத்ததாகக்கூறப்படுகிறது. ஜெயலலிதா பிறந்தநாளான நாளை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலா் அந்த உயிலை பத்திரிக்கையாளா்கள் முன்னிலையில் டெல்லியில் வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி உயில் வெளியே வரும் பட்சத்தில் போயஸ் கார்டன், கொடாநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதாவின் பல சொத்துக்கள், அவரது அண்ணன் மகன்தீபக், மற்றும் தீபாவிடம் வந்து சேர உள்ளது. அண்ணா திமுகவினரின் புனிதஸ்தலமாக பார்க்கப்படும் இடம் போயஸ் கார்டன். அந்த புனிதஸ்தலம் தீபா மற்றும் தீபக்கிற்கு கைமாறும்போது அதில் இருந்து சசி மற்றும் அவரது குடும்பத்தினா் தாங்களாகவே வெளியேறுவார்கள்.
அப்போது முதல் அதிமுக தலைமையும் மாறும், தொண்டா்கள் விரும்பியபடி கட்சியும், ஆட்சியும் சசிகலா கையில் இருந்து பறிக்கப்பட உள்ளது. இதன் அச்சாரமாகதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஒரு தனியார் தொலைகாட்சிக்கு தொலைபேசியின் வாயிலாக திடுக்கிடும் பேட்டி அளித்தார். அதில் பல கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து பேசிய தீபக் , போயஸ் கார்டனை பற்றி தன் கருத்தை அதிரடியாக கூறினார். நாளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதால் அதிமுக கட்சியினரிடையே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், போயஸ் கார்டன் எனக்கும் , தீபாவுக்கும் தான் சொந்தம் என, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 1௦௦ கோடி ரூபாய் அபராத தொகையை ,தீபக்கே தனி மனிதனாக கட்ட உள்ளதாகவும் அதன் பின், போயஸ் கார்டன் தனக்கும் தீபாவுக்கும் தான் சொந்தம் என குறிபிட்டுள்ளார் . தீபக்கால் அன்பாக சசிகலா ஆண்டி என அழைக்கப்படும் சசிகலா தற்போது , பெங்களூரு அக்ரஹாரா சிறையில் உள்ள இந்நேரத்தில் தீபக் இவ்வாறு கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதனால் சசியின் கூட்டம் ஆட்டம் கண்டு உள்ளது. சசிக்கு ஜெயிலில் திக், திக் என்று இருப்பதாக கூறுகின்றனா். லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக