வியாழன், 16 பிப்ரவரி, 2017

கூவத்தூர் விடுதியில் சில எம் எல் ஏக்கள் உண்மையிலேயே ஜாலியாக இருக்கிறார்கள்

கூவத்தூர் சொகுசு விடுதியில் 'பெர்முடாஸ்' அணிந்த படி, சென்னை தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ. சத்யா நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே வந்தார். அப்போது, நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா? நல்லபடி கவனித்து கொள்கிறார்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். அதிகாலையிலேயே மட்டன் கொடுக்கிறார்கள். மட்டையும் ஆக்குகிறார்கள். வீட்டில் வழங்கப்படும் உணவை விட மிக சிறந்த உணவு வழங்கப்படுகிறது. மட்டன், சிக்கன், பழ வகைகள் அவ்வப்போது கிடைக்கிறது என்றார். பின்னர் அவரிடம் வெளி மாநில தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டி வேண்டும் என்று கேட்டனர். அவரும் அதற்கு சம்மதித்தார். ஆனால், நுழை வாயிலில் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த ஒருவர் அவரை வெளியே செல்ல அனுமதி மறுத்தார். எனினும், சத்தியா மீறி வெளியே வந்து பேட்டி அளித்து மீண்டும் சொகுசு விடுதிக்குள் சென்றார். அரவிந்த் படங்கள்: செண்பகபாண்டியன்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக