திங்கள், 13 பிப்ரவரி, 2017

தீர்ப்பு எதிரானால் செங்கோட்டையன் முதலமைச்சர்? நடராஜன் , எடப்பாடி,தம்பிதுரை எதிர்ப்பு

சசிகலாவிற்கு அடுத்தபடியாக தற்போது அதிமுகவில் சீனியர்கள் என்றால் அது செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி என்ற நிலையில் தான் உள்ளது. சசிகலா நேற்று பேசிய பேச்சிற்கும், இன்று பேசிய பேச்சிற்கும் வித்தியாசம் உள்ளதாக அதிமுக சீனியர்கள் நினைக்கின்றனர். இதுகுறித்து விகடனிலும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. செங்கோட்டையனை முதலமைச்சராக ஆக்க சசிகலாவிற்கு விருப்பம் உள்ளதாம். ஆனால் இதற்கு எடப்பாடியும், தம்பிதுரையும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, கணவர் நடராஜனும் கடுமையாக எதிர்க்கிறாராம்.
செங்கோட்டையனை முதலமைச்சராக தேர்வு செய்தால், பன்னீர் செல்வம் அணி பலம் இழந்துவிடும் என்றும் அவர் எம்.ஜி.ஆர் கால உறுப்பினர் என்பதால், அதிமுக அடிமட்டத் தொண்டர்களும் அவரை ஏற்றுக் கொள்வார்கள் என சசிகலா நினைக்கிறாராம். சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த மாற்றமும் நிகழலாம் என கூறப்படுகிறது.லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக