வியாழன், 2 பிப்ரவரி, 2017

ஜல்லிகட்டு திருவிழாவில் காணமல் போன அரசியல் முகங்கள் ! பட்டியல் நீள்கிறது .... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத சோகம் தீபாவுக்கு?

மெரீனா புரட்சி தமிழகத்தின் எல்லா அரசியல் தளங்களிலும் வெடிப்புகளை உண்டாக்கிவிட்டது. முதலடி விழுந்தது சினிமா நடிகர்களுக்குதான். அவர்கள் ஒன்றுமே நடக்காதது மாதிரி காட்டிக்கொண்டே உள்ளுக்குள் கலங்கி போயுள்ளார்கள். அடுத்த அடி விழுந்தது தீபாவுக்குதான். தீபா என்ன சொல்கிறார் என்று இப்போதெல்லாம் யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவரின் டி ஆர் பி காணமல் போய்விட்டது.   சின்னம்மா ஏற்கனவே சாயம் போன நிலையில்தான் உள்ளார். அவரின் பணத்தில் இயங்கும் ஊடகங்கள் என்னதான் மேக்கப் போட்டாலும் அது இனி ஜொலிக்காத அளவுக்கு  பிக்சர்  டமேஜாகிவிட்டது.
மெல்ல மெல்ல காலை ஊன்றலாம் என்று எண்ணி இருந்த தீபாவுக்கு கொஞ்சம் கூட எதிர்பாராத திசையில் இருந்து இடிபோல கிளம்பியது ஜல்லிகட்டு முழக்கம் .
மெரீனாவில் கூடிய கூட்டத்தை எண்ணி எல்லா கட்சிகளும்  கவலையாகத்தான் உள்ளார்கள்.
எப்படித்தான் பார்த்தாலும் ஜல்லிகட்டு எழுச்சி ஒரு டெல்லி ஆம் ஆத்மியை போல மக்கள் மத்தியில் அதிர்வை உண்டாக்கி உள்ளது  என்ற பயம்தான் எங்கும் நிலவுகிறது.  .
தமிழகத்தையும் தாண்டி கேரளா கர்நாடக ஆந்திராவிலும் கூட  இந்த அதிர்வு உணரப்படுகிறது ! இது  யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாகும் . பாராளுமன்றத்தில் பட்ஜெட் வாசிக்கும் வரைக்கும் , இந்த மாநிலங்களின் ஊடகங்களில்  மூன்று வாரங்களாக ஜல்லிகட்டு போராட்டமே விவாதிக்கப்பட்டது .
 


ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தீயாய் களம் இறங்கியவர்கள் தமிழக இளைஞர்கள். அவர்களை பார்த்து உலகமே வியந்தது. இது போன்ற நல்லவர்கள்தான் இனி நாட்டை ஆளவேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் பேச்சு பரவலாக எழுந்தது. இதனையடுத்து அரசு அவர்களை ஒரு கைப்பார்த்தது. இதனால் அவர்கள் துவண்டு விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டது. ஆனால், அவர்கள் பீனிக்ஸ் பறவை போல் புறப்பட தயாராகிவிட்டனா். இளைஞா்களின் கோபத்தை எம்.என். நடராஜன் திமுக பக்கம் திசை திருப்ப முயன்றார். திமுகவுக்கும் இந்த இளைஞர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மிக பெரிய கேள்வியும் உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் ஆக உள்ளது.

அவர் வருகிற 5ம் தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் சுற்று பயணத்தை துவக்குவார் என தெரிகிறது. இது குறித்த எம்.என்.நடராஜன் ஆதரவாளா்களிடம் பேசும்போதும் அவர்கள் கூறியதாவது, தீபாவை இவங்கள்லாம் ஏதோ பெரிய பொலிட்டீஷியன் ரேஞ்சுக்கு யோசித்ததே முட்டாள்தனம்.

அந்தப் பொண்ணு காலையில பத்துமணிக்கு மேலதான் எழுந்து சூரியனையே பார்க்கும். குளிச்சுட்டு டிஃபன் முடிக்கறதுக்குள் நாங்க அசெம்பிளியில் முதல் செஷனையே முடிச்சிருப்போம். தீபான்னா யாரு, தீபக் என்றால் யாருன்னு இவங்களில் யாருக்காவது ஒரு வருஷத்துக்கு முன்னால தெரியுமா? எம்.என். (ம.நடராசன்) அய்யா இருக்கறவரை ஒன்றும் நடக்காது.

ஆரம்ப காலத்தில், ஜெயலலிதா வகித்த வந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை தீபாவுக்கு கொடுத்து அம்மா புகழ்பாடும் விதமாக டூர் அனுப்பி வைக்கவே திட்டம் வைத்துள்ளோம். கூடவே எம்.பி பதவியும் தரப்படும். இது தீபாவுக்கும் தெரியும். டெல்லியில் இருக்கும் எங்கள் பிரதிநிதி தம்பித்துரைக்கும் தெரியும். அதுக்கு ஆறேழு மாதங்கள் ஆகும். அதுவரைக்கும் தீபாவுக்கும் டைம்பாஸ், எங்களுக்கும் டைம்பாஸ் அவ்வளவுதான்’’ என்று அடுத்தடுத்த திட்டங்களைச் சொல்லி அதிர வைக்கின்றனர்.

தீபாவை மாற்று சக்தியாக கருதுகிறவர்களே, ஒருவேளை தீபா கொஞ்சம் சறுக்கினாலும் அதற்கும் மாற்று யோசித்து வைத்துள்ளனர். எல்லாவற்றுக்கும் விடை பிப்ரவரி 24-ஆம் தேதி தெரிந்துவிடும் என்று நம்புவோம் என அவரது ஆதரவாளா்கள் உள்ளனர்.

 இந்த நிலையில் புயலாக புறப்பட்டு உள்ளது இளைஞா்கள் கட்சி. தமிழகத்தில் கட்சிதான் இனி வெயிட். தீபா அரசியல் பிரவேசம் என்பது எல்லாம் இனி டவுட் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக