செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

கூவத்தூர் கைதி எம்.எல்.ஏ.,க்கள் கடல் வழியே படகில் தப்ப முடியுமா?

தீவுக்குள் அமைந்துள்ள, சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், படகு மூலம் தப்ப முடியுமா என, ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.< கல்பாக்கத்தை அடுத்துள்ள கூவத்துார், 'கோல்டன் பே' விடுதி, கடலை ஒட்டிய உப்பங்கழி, முகத்துவாரத்தை ஒட்டி உள்ளது. இதில், 34 அறைகள் மட்டுமே உள்ளன. இங்கு, அ.தி.மு.க.,வின், 100 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு அறைக்கு, மூன்று பேர் வீதம், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முதல் இரு நாட்களில், எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வத்துடன் நடனம்ஆடிய காட்சிகள், கேமராக்களில் ரகசியமாக படமாக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது. குடும்பத்தினருடன் பேச உதவி படகு சவாரி, மிதக்கும் ஓட்டல்,ஜிம், பார், சூரிய குளியல் போன்ற வசதிகள் உள்ளன. ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு, மூன்று பேர் வீதம், வெளியூர் குண்டர் படையினர் கண்காணிப்பு பணியில் இருப்பதால், எம்.எல்.ஏ.,க்கள் தப்பிக்க முடியாமல், தவித்து வருகின்றனர். 

அவர்களது மொபைல் போன்களை, சசி தரப்பினர், வாங்கி வைத்துள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள வழி இல்லாததால், அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், விடுதியின், 044 - 710 11555, 1800 120 0051, 044 - 3098 5555 ஆகிய டெலிபோன்எண்களில், பேச முயற்சித்து வருகின்றனர்.     இவனுங்க குத்தாட்டம் போட்டது பெண்களுடன் உல்லாசமா இருந்தது எல்லாவற்றையும் வீடியோ எடுத்து தமிழ் ராக்கர்ஸ் இடம் கொடுக்க வேண்டியதுதான்

குண்டர் படையினரின் சிலர், எம்.எல்.ஏ.,க்களுக்கு தங்கள் போனை கொடுத்து, குடும்பத்தினருடன் பேச உதவி வருகின்றனர்.< படகில் தப்ப ஆலோசனை
இதை பயன்படுத்தி, விடுதிக்கு பின்புறம் உள்ள, உப்பங்கழி வழியே, விசைப்படகில் தப்பி விடலாமா, என, எம்.எல்.ஏ.,க்கள் பலர் ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிலர், காது குத்து, நிச்சயதார்த்தம், குலதெய்வ கோவிலில் பூஜை, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என, பல காரணங்களை கூறி, வெளியே செல்ல அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், யாரையும் வெளியே அனுப்பக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

- நமது நிருபர்  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக