செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

இதோ வருகிறேன் நெடுவாசல்: போலீஸ் அடிச்சா திருப்பி அடி: கமல் கொந்தளிப்பு


அடிச்சா திருப்பி அடி அப்போ தான் அரசியல் வாதி அடங்குவான் கமல்
முல்லையில் தண்ணீர் கேட்டால்.
கேராளக்காரன் அடிக்கிறான்
காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்
செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்
தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்
தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்…..!!!!
முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை
காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை
காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை
குளமேதும் வெட்டவில்லை

கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது
குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது
ஆனால்
விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை
ஏரியை அழித்து
கல்லூரி கட்டியாச்சு
குளத்தை அழிச்சு
கம்பெனி கட்டியாச்சு
வயக்காட்டை அழிச்சு
வீடு கட்டியாச்சு
தவறு எல்லாம்
மக்களாகிய நம்மீது தானே தவிர
அடுத்தவன் மீது இல்லை
துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு
இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு
நீர்வளத்தை
மணல்வளத்தை
காடுகளை
அழித்தபோது வேடிக்கை
பார்த்தது யாரு
உன்னால் இன்று
நெஞ்சை நிமிர்த்தி
நம்ம அரசியல்வாதியிடம்
நம்ம பிரச்சனையை
சொல்ல முடியுமா…??
கேட்க முடியுமா….??
தமிழக அரசே..
தமிழக தன்மான மக்களே
முதலில் தமிழகத்தில்
அணைகட்ட சொல்லுங்க
நதியை இணைக்க
சொல்லுங்க
இதை செய்யுரவனுக்கு
ஓட்டுப்போடுங்க
மிக்சி.கிரைண்டர்.டி.வி.
எல்லாம் நம்மலே
வாங்கலாம் ஆனா
அணை கட்ட முடியுமா  ….??
வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது
இன்று
#மாறுங்கள்  மண்னின் மைந்தர்களே ..
தன்மான தமிழர்களே
வீர விளைந்த மக்களே!!
சூடும்,சொரைனையும்
நிறைக்கொண்டு வாழும் இனமே..
மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும் .நெடுவாசல் போர் கண்டு நடுங்கட்டும் ஆட்சி. அடிப்பான் என்றால் திருப்பி தாக்கு..இது உன் தலைமுறைக்கான போர்.இதோ நானும் வருகிறேன்.
தமிழன்: கமல்ஹாசன்:28:02:2017   லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக