சனி, 18 பிப்ரவரி, 2017

கூவத்தூரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்களை அழைத்து ( இழுத்து ) வரும் காட்சி படங்கள் !

<முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 உறுப்பினர்களும், ஒ.பன்னீர்செல்வத்துக்கு 11 உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர். காலை 10.30 மணிக்கு ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு புறப்படுகின்றனர். இதனிடையே நேற்று மாலை கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அருண்குமார் தப்பித்துள்ளார். அவர் வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கூறி சென்றுவிட்டார். இதனால் மேலும் சிலர் தங்கள் அணிக்கு சாதகமாக இருப்பார் என பன்னிர்செல்வம் அணியினர் கருதினர். கூவத்தூரில் இருந்து எம்எல்ஏக்கள் புறப்பட்டதால் அவர்களுடை செல்போன் இயக்க தொடங்கியது. மேலும் 10 எம்எல்ஏக்கள் கிடைத்தால் போதும் என்று பன்னீர்செல்வம் தரப்பினர் கருதுகின்றனர்.







படங்கள்: செண்பக பாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக