புதன், 15 பிப்ரவரி, 2017

சசிகலாவும் இளவரசியும் ஒரே அறையில்.. சிறை அதிகாரி உத்தரவு !

ஒரே அறையில் சசிகலாவும், இளவரசியும்! சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் சரண் அடைந்தனர். பின்னர் நீதிபதி உத்தரவுப்படி இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர். இளவரசியையும் தம்மையும் ஒரே சிறை அறையில் அடைக்குமாறு நீதிபதியிடம் சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். யாருடன் யாரை அடைப்பது என்பது குறித்து சிறை அதிகாரியே முடிவு செய்வார் என சசிகலாவின் கோரிக்கைக்கு நீதிபதி பதில் அளித்தார். பின்னர் சசிகலா கோரிக்கையை ஏற்று இருவரையும் ஒரே அறையில் அடைக்க சிறை அதிகாரி உத்தரவிட்டார். சிறை அதிகாரி உத்தரவை அடித்து சசிகலா, இளவரசி ஒரே அறையில் அடைக்கப்பட்டனர். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக