வியாழன், 9 பிப்ரவரி, 2017

தப்பி ஓடிவந்த எம் எல் ஏ சண்முகநாதன் : முதல்வர் பதவியை அடைந்தே தீருவேன் என்ற வெறியோடு உள்ளார் சசிகலா !

#Sasikala broker : #porki Dr. Subramanian Swamy 😂
#Ops broker : 420 H Raja
 #தீபா broker : #RSS media coordinators Totally
 #ADMK C/o #BJP & #RSS...

 விகடனுக்கு அளித்த பேட்டியில் எஸ்.பி.சண்முகநாதன்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?
 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு வந்ததும் அதில் பங்கேற்றேன். கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று பேசினார்கள். நீங்கள் எப்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தீர்கள்?
 எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சொகுசு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் நீங்கள் மட்டும் எப்படித் தப்பினீர்கள்? கூட்டம் முடிந்ததும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சொகுசு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலிருந்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு பஸ் வந்தது. அப்போது அங்கிருந்து வெளியேறினேன். இதன் பிறகு சொகுசு பஸ் எங்கு சென்றது என எனக்குத் தெரியாது.


உங்களை யாரும் தடுக்கவில்லையா?

என்னை யாரும் தடுக்க முடியாது. நான் வித்தியாசமானவன்.

உங்கள் மனநிலையில்தான் மற்ற எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்களா?

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் மனநிலை தெரியவில்லை. சுதந்திரமாக எம்.எல்.ஏ.க்களை செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் என்னுடைய மனநிலைக்கு அவர்களும் வந்துவிடுவார்கள். எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக வெளியில் விட வேண்டும்.

நீங்கள் எதற்கு சசிகலாவை எதிர்க்கிறீர்கள்?

'முதல்வர் பதவியை அடைந்தே தீருவேன்' என்று வெறியில் சசிகலா உள்ளார். அதனால்தான் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தேன்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?

அந்த விவரம் தெரியவில்லை. கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. நானும் கையெழுத்திட்டுள்ளேன். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அம்மாவின் உண்மையான அ.தி.மு.க. விசுவாசிகள் ஆதரிப்பார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக