செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

மீதேன் திட்டத்தை எதிர்த்த புதுகோட்டை எம் எல் ஏ எஸ் .பி.முத்துகுமரன் கொலை செய்ப்பட்டாரா?

கடந்த 2012ம் ஆண்டு புதுக்கோட்டை எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன், நெடுவாசல் மண்ணின் மைந்தனாக உருவெடுத்தவர். கார் விபத்தில் பலியானார்.
இவர் சட்டசபையில் தனது தொகுதி சார்பாக அதிக கேள்விகளை எழுப்பிய சிறந்த எம்எல்ஏ என சபாநாயகரால் பாராட்டுகளை குவித்தவர். மிகவும் நேர்மையான மனிதராகவும் இருந்த அவர், மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு மிக பலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த போராட்டத்தை தடுக்க நினைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, எஸ்.பி.முத்துக்குமரன் விபத்தில் பலியானாரா? அல்லது மீத்தேன் திட்டத்தை எதிர்த்ததற்காக விபத்து ஏற்படுத்தி கொல்லப்பட்டாரா என பல சந்தேகங்களை எழுப்பியது. இந்த விபத்து தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டம் 279, 337 மற்றும் 304ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போதும் போராட்டங்களை ஒடுக்க காவல்துறை மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியும் அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டித்து தனது பேஸ்புக் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளது. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக