புதன், 15 பிப்ரவரி, 2017

ராஜ் டிவி ,சன்டிவி பங்குகள் உயர்ந்தன ... சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி!

சன் டிவி பங்குகள்ராஜ் டெலிவிஷன்சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக கட்சித் தலைவர் வி கே சசிகலா எதிராக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சன் டி மற்றும் ராஜ் டிவி நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக உயர்ந்தன. Written by: Tamilarasu

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக கட்சித் தலைவர் வி கே சசிகலா எதிராக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சன் டி மற்றும் ராஜ் டிவி நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக உயர்ந்தன.
சன் டிவி பங்குகள் கலாநிதி மறனின் சன் டிவி பங்குகள் இன்று 4 சதவீதம் வரை உயர்ந்து 741 ரூபாய் பங்கின் விலையாக வர்த்தகம் ஆனது.
சன் டிவி குழுமத்தில் கலாநிதி மாறனுக்கு 75 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று ஒரு வாரத்திற்கு முன்பு ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் இருந்து கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை அடுத்து சன் டிவி பங்குகள் நான்கு வருட உயர்வைப் பெற்றது.

ராஜ் டெலிவிஷன் ராஜ் டெலிவிஷன் பங்குகள் இன்று 12 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 72.75 ரூபாய்க்கு மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆனது.

சென்செக்ஸ் மற்றும் நிப்டி நேற்றை(13/02/2017) போன்றே சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் பிளாட்டக முடிந்தது. ஐடி, தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டாலும் மோட்டார் வாகன நிறுவனப் பங்குகள் இன்று சரிவை தான் சந்தித்தன.
சென்செக்ஸ் மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் இன்று 0.01 சதவீதம் அதாவது 4.06 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 28,355.68 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.
அமெரிக்காவில் புதிய தொழிற்சாலை.. டிவிஎஸ் குழுமத்தின் அதிரடி..
! 2ஜி ஊழல் குற்றவாளிகளுடன் தொடர்பு.. ரூ.690 கோடி சொத்து.. தேர்தல் களம் காணும் பாஜக வேட்பாளர்..!
இந்திய முதலீட்டில் ரூ.2043.5 கோடி நஷ்டம்.. சோகத்தில் மூழ்கிய சாப்ட்பேங்க்..!
நிப்டி தேசிய பங்குச் சந்தையான நிப்டி இன்று 0.05 புள்ளிகள் உயர்ந்து 8,801.20 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.
இன்றைய டாப் ஐந்து பங்குகள் பார்தி ஏர்டெல் (+ 3.00%), கெயில் (+ 2.84%), ரிலையன்ஸ் (+ 1.94%), ஓஎன்ஜிசி (+ 1.8%), ஐசிஐசிஐ வங்கி (+ 1.38%)
இன்று நட்டம் அடைந்த ஐந்து பங்குகள் டாடா மோட்டார்ஸ் (-3.6%), சன் பார்மா (-2.08%), ஹீரோ மோட்டோகார்ப் (-1.93%), HUL (-1.71%) மற்றும் மாருதி (-1.43%)
//tamil.goodreturns.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக