சனி, 25 பிப்ரவரி, 2017

சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சந்திப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் 24-02-2017 வெள்ளிக்கிழமை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை டெல்லியில் நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம், தமிழக சட்டப்பேரவையில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் ஸ்டாலினுடன் சென்றனர். , முன்னதாக, வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், விதிமீறி நடந்த வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுமாறு அப்போது வலியுறுத்தினார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக