ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தூத்துக்குடி படகு விபத்து 9 பேர் உயிரிழந்தனர் ! 4 பெண்கள் ,2 சிறுவர்கள் உட்பட ..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் 20க்கு மேற்ப்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்றர். இந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்செந்தூரில் இருந்து 20க்கு மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது படகானது மணப்பாடு அருகே வந்த போது கவிழ்ந்தது. இதனால் படகில் சென்ற பயணிகள் அனைவரும் கடலில் மூழ்கினர். 9 died in Tiruchendur sea as boat capsized near Manappadu கடலில் விழுந்து தத்தளித்த சிறுமி உள்பட 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் பலியானார்கள். கடலில் மூழ்கிய மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த 9 பேரில் 4 பேர் பெண்கள், 2 சிறார்கள் ஆவர்; அனைவரும் திருச்சி மற்றும் திருச்செந்தூர் பட்டுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்கள் தூத்துக்குடியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீனவர்களும் தங்களது படகுகளுடன் கடலில் தத்தளிப்பவர்கள காப்பாற்றுவதற்கான கடலுக்குள் விரைந்துள்ளனர். மீன் பிடிக்கும் படகில் அனுமதியின்றி 20க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படகை ஓட்டிச் சென்ற செல்வம் என்பவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக