செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

7 பேர் விடுதலை .. மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது .. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Supreme Court rejects review petition by Tamil Nadu government டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறுவது அவசியம் என்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.   மிகவும் அமைதியாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா இவர்களை விடுதலை செய்திருக்க முடியும். மத்திய அரசுக்க்க்கும் நீதித்துறைக்கும் சவால் விட்டு அவையில் முழங்கியதால் அவர்களும் வேறு வழியின்றி மறு ஆய்வுக்கு அனுப்பி இப்போ இந்த அளவில் வந்து நிற்கிறது . அன்று அம்மாவை உசுப்பேத்தி கலைஞரை பழிவாங்குகிறேன் என்று புறபட்டவர்கள்தான் இந்த நிலைக்கு காரணம் .. வைகோ, தமிழருவி மணியன், நெடுமாறன், சீமான், பாண்டியன் போன்றோர் என்ன கூறப்போகிறார்கள்?
இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய விவகாரத்தில் மத்திய அரசின் ஆலோசனையை பெற வேண்டுமே தவிர, அனுமதியை பெற தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து 7 பேரின் விடுதலை எப்போது என்ற கேள்வி தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கிறது   tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக