புதன், 15 பிப்ரவரி, 2017

ஆளுநர் - பன்னீர்செல்வம் 8.30( pm) மணிக்கு சந்திப்பு .. முக்கிய முடிவு எனத் தகவல்

இன்று இரவு 7.30 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சந்திக்கிறார். இவர்களுடன் அதிமுகவின் செங்கோட்டையன், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 10 அதிமுக நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். இதனைத்தொடர்ந்து, 8.30 மணியளவில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் 2 பேரின் சந்திப்புக்கு பிறகு ஆளுநர் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், தமிழக முதல்வராக ஓபிஎஸ் நீடிப்பாரா? அல்லது எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க ஆளுநர் உத்தரவிடுவாரா? என தெரியவரும் எனக் கூறப்படுகிறது.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக