ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

நந்தினி வழக்கு .. போலீஸ் மீது மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 ன் கீழ் வழக்கு

1.முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உள்ளிட்ட 4 பேருக்கும் அடுத்த 1 வருடம் பிணை கொடுக்க கூடாது. 
2. சிறப்பு வழக்கறிஞர் குழுவினை ஏற்படுத்தி வழக்கு நடத்த அரசு முன்வர வேண்டும்.அந்த குழுவில் இடம் பெரும் வழக்கறிஞர்கள் நந்தினியின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு ஏற்ப நியமிக்க வேண்டும்.
 3.நந்தினியின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிவாரணமும் அரசு வேலையும் மாதம் 15,000 ஓய்வு ஊதியமும் வழங்க வேண்டும். 
4.அணைத்து குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். 5.வேண்டும் என்றே கடமையை புறக்கணித்த டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ் மீது மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்து பனி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

Vincent Raj:  நந்தினியின் வீட்டிற்கு இன்று மாலை 6.30 மணிக்கு தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று இருக்கிறார்.அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் படுத்தி இருக்கிறார்.சட்ட மன்றத்தில் நீதிக்காக போராடுவேன் என்று உறுதியும் அளித்து இருக்கிறார்.ரூபாய் 50,000 நிதிஅளித்து உதவி அளித்து மேலும் 50000 கொடுக்கிறேன் கூறி சென்று இருக்கிறார்.மு.க.ஸ்டாலின் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.சி.பி.எம்.மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும் நேரடியாக சந்தித்து ஆறுதல் படுத்தி 25000 நிதி உதவி அளித்து இருக்கிறார்.விடுதலை சிறுத்தைகள் நந்தினியின் நீதிக்காக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி ரூபாய் 1,00,000 நிதி உதவி அளித்து இருக்கிறது.வழக்கு பதிவு செய்ய வைத்த பி.எஸ்.பி.கட்சியினை பாராட்டுகிறேன்.ம.க.இ.க, சி.பி.ஐ.உள்ளிட்ட கட்சிகளும் இயக்கங்களையும் நந்தினியின் நீதிக்காக தொடர்ந்து களத்தில் போராடி வருகின்றனர்.

நேற்று இரண்டாவது முறையாக நந்தினியின் அக்காவும் அம்மாவும் என்னை சந்திக்க மதுரை வந்து இருந்தனர்.உங்களை நம்பித்தான் சார் நாங்கள் இருக்கிறோம் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் சார் என்றனர்.நந்தினிக்கு அரசியல் ரீதியாக சமூக ரீதியாக இது போன்ற ஆதரவு பெருகி இருப்பதனால் நிச்சயம் தண்டனை வாங்கி கொடுத்துவிட முடியும்.
சில பரிந்துரைகள் அரசுக்கு வலுவாக கொண்டு செல்ல வேண்டும் தோழர்களே..
1.முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உள்ளிட்ட 4 பேருக்கும் அடுத்த 1 வருடம் பிணை கொடுக்க கூடாது.
2. சிறப்பு வழக்கறிஞர் குழுவினை ஏற்படுத்தி வழக்கு நடத்த அரசு முன்வர வேண்டும்.அந்த குழுவில் இடம் பெரும் வழக்கறிஞர்கள் நந்தினியின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு ஏற்ப நியமிக்க வேண்டும்.
3.நந்தினியின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிவாரணமும் அரசு வேலையும் மாதம் 15,000 ஓய்வு ஊதியமும் வழங்க வேண்டும்.
4.அணைத்து குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
5.வேண்டும் என்றே கடமையை புறக்கணித்த டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ் மீது மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 ன் கீழ் வழக்கு பதிவு செய்து பனி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்த பரிந்துரையை தமிழகம் முழுவதும் பரப்புரையாக கொண்டு செல்லுங்கள் நண்பர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக