சனி, 25 பிப்ரவரி, 2017

20 கிராமங்களில் நாளை உண்ணாவிரதம், நெடுவாசலின் உச்சகட்டம்!

நாடுமுழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை
செயல்படுத்த மத்திய அரசு பல இடங்களை தேர்வுசெய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் நெடுவாசல் உள்ளிட்ட சுமார் 15 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், புதுகை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து சுற்றுவட்டார மக்கள் கடந்த ஒரு சில நாட்களாகவே போராட்டக்குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களோடு சென்னை ஐ.டி. ஊழியர்களும் போராட்டம் செய்துவந்தனர். மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் மேலும் சென்னை உள்ளிட்ட ஐ.டி., நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், நெடுவாசல், புள்ளான் விடுதி கள்ளிக்கொல்லை, வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட 20 கிராமத்திற்கு மேற்பட்ட மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு நாளைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.டி. ஊழியர்களோடு கைகோர்க்கின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக நேற்று ஐடி., இளைஞர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை, திலகர் திடலில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்போல் உருவெடுக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  லைவ்டே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக