செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி,, மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம்.. மொத்தம் ரூ.140 கோடி அபராதம்.. ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் சொத்துக்களை விற்று பறிமுதல் !

Fine of Rs 140 crore will be recovered by the sale of the DA assetsஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட ரூ. 140 கோடி அபராதத்தை அவர்களது சொத்துக்களை விற்று கோர்ட் வசூலிக்கவுள்ளது. By: Sutha
சென்னை:

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட மொத்தம் ரூ. 140 கோடி அபராதத் தொகையை கோர்ட் வசூலிக்கவுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பளித்தார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று கூறிய குன்ஹா அனைவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்
இந்தத் தீர்ப்பைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் தற்போது ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கான சிறைத் தண்டனையை மட்டும் விட்டு விட்டு அபராதத் தொகையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதமும் அமலுக்கு வருகிறது. மற்றவர்கள் தங்களுக்கான அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 1 ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.
தற்போது மொத்தம் உள்ள ரூ. 140 கோடி அபராதத்தையும் அவர்களிடமிருந்து ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துக்களை விற்று அதிலிருந்து நீதிமன்றம் வசூலிக்கவுள்ளது. tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக