தேச விரோத Peta + தேச பக்தி = கள்ளக்கூட்டு
சுப்பிரமணிய சுவாமியை கொண்டு வந்து போராடும் மாணவர் மத்தியில் ஒப்படைத்து விடுங்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்பதை விடவும் அது முக்கியமானது.
சிறப்பான முறையில் மாணவர்களே ஜல்லிக்கட்டை நடத்தி முடிப்பார்கள். பேராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எளிய வழி.
18 தேதி.
‘பொறுக்கி என்று தமிழர்களை திட்டிய சு.சுவாமி மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சு. சுவாமி பகிரங்க < மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்ற முழக்கமும் முதன்மையாக இருக்க வேண்டும்.‘Peta தேச விரோத அமைப்பு’ என்று மு.க. ஸ்டாலின் சொன்னதற்கு, ‘விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி’ என்று விலங்காபிமானத்தோடு ‘சைவ உணவு’ பிட்டா அமைப்பாளர்களிடமிருந்து பதில் வந்திருக்கிறது. நல்லது.
காலில் சங்கிலியிட்டு, அங்குசத்தால் குத்தி, காதருகே வெடி வெடித்து, கும்பலாக சூழ்ந்து பக்தியினால் இம்சித்து அதிகத் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவது கோயில் யானைகள்.
‘யானைகளை கோயிலில் பயன்படுத்தக் கூடாது’ என்று தடை அல்ல கோரிக்கைக் கூட ஏன் வரவில்லை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக