வியாழன், 5 ஜனவரி, 2017

ஸ்டாலின் கனிமொழியை ஓரம் கட்டினார் .. here after one man show ? like admk?

இன்று நடந்த பொதுக்குழுவில் ஒரு வழியாக செயல் தலைவராகி விட்டார். கூடவே, கட்சியின் மகளிர் அணி செயலராக இருக்கும் கனிமொழிக்கு, துணைப் பொதுச் செயலர் பதவியை கொடுக்க ஒப்புக்கொண்டவர், கடைசி நேரத்தில், அதெல்லாம் கிடையாது என்று கூறினார்
சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது.  கலைஞருக்கு  உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை, காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதால், கடந்த மாதம் கடைசியில் நடக்க வேண்டிய பொதுக்குழு கூட்டம், இம்மாதம் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.இந்தப் பொதுக்குழு மூலம் எப்படியும் தன்னை, கட்சியின் புதிய செயல் தலைவராக அறிவித்து விட வேண்டும் என கடும் முயற்சி மேற்கொண்ட, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரியும், கட்சியின் மகளிர் அணி செயலருமான கனிமொழிக்கு, எந்த புதிய பதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராகவும்; பொருளாளராகவும்; சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் ஸ்டாலின், கட்சியின் தலைவர் ஆகி விட வேண்டும் என, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வருகிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் அதற்கான வாய்ப்பு வரும்போதெல்லாம், அதை யாராவது தட்டிவிடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இன்று நடந்த பொதுக்குழுவில் ஒரு வழியாக செயல் தலைவராகி விட்டார். கூடவே, கட்சியின் மகளிர் அணி செயலராக இருக்கும் கனிமொழிக்கு, துணைப் பொதுச் செயலர் பதவியை கொடுக்க ஒப்புக்கொண்டவர், கடைசி நேரத்தில், அதெல்லாம் கிடையாது என கட்டையைப் போட்டார். இதனால், குடும்பத்தில் பொதுக்குழுவுக்கு முன், கடும் குழப்பம் நிலவியது. இதனால், கனிமொழி அதிர்ச்சியில் உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக