ஞாயிறு, 15 ஜனவரி, 2017

அவனியாபுரத்தில் காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் ...Flash back: செக்ஸ் டார்ச்சர் ... பெண் இன்ஜினியர் தற்கொலை ...

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் கதிர் அறுப்பு வைபவ விழா இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மீனாட்சி அம்மன் சுவாமி வீதி உலா மேல அனுப்பானடி பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
அந்த நிகழ்வை மதுரை தினதந்தி பத்திரிகையின் புகைப்படக்கலைஞர் சரவணன் இன்று 23-01-2016 சுமார் காலை 11.45 மணி அளவில் புகைப்படசெய்தி பதிவு செய்ய சென்றார்.
அப்போது அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் சேதுமணி மாதவன் அநாகரீகமான தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சரவணனை நீ பத்திரிகையில் வேலைபார்த்தால் என்ன பெரிய ...................( பதிவிட முடியாதா வார்த்தைகள்) திட்டி தாக்கிவிட்டு நீ என்னை ஒன்றும் புடுங்க முடியாது ,என்று மிரட்டல் விடுத்து அவரது இரு சக்கர மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது ஏடிஎம் கார்டு, தினதந்தி பத்திரிகையின் அடையாள அட்டை, மணி பர்ஸ், ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்று விட்டார்.
  யார் இந்த சேது மணி மாதவன் ?


பெண் என்ஜினீயரின் தற்கொலை வழக்கில் செக்ஸ் டார்ச்சர் செய்ததால் சஸ்பென்ட் செய்யப்பட்டவர்.
கொஞ்சம் 9 ஆண்டுகளுக்கு பின்னால் பாருங்கள்....
தஞ்சையில் போலீசாரின் செக்ஸ் சித்ரவதையால் தற்கொலை செய்து கொண்ட பெண் என்ஜி னீயரின் கடித நகல் தட வியல் சோதனைக்கு அனுப் பப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
கோவை பெண் என்ஜினீயர் அகிலாண்டேசுவரியின் தற் கொலை வழக்கு விசாரணையில் நிறைய விவரங்கள் தெரியவந்து உள்ளன. இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், அகிலாண்டேசுவரி மற்றும் அவரது பெற்றொருடன் போனில் தொடர்புவைத்து இருந்திருக்கிறார்.
மேலும் 17-11-2007-ந்தேதி அன்று நள்ளிரவு 1 மணி அளவில் அகிலாண்டேசுவரி தஞ்சைக்கு வருவது குறித்து அவரிடம் இருந்து கிடைத்த எஸ்.எம்.எஸ். தகவ லின் பேரில் சேதுமணி மாதவன் பஸ்நிலையம் சென்று அவரை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு தெற்கு போலீஸ் நிலையத் துக்கு ஒரு லாட்ஜில் அரசு என்ற பெயரில் அகிலாண் டேசுவரியின் தந்தை முன்பதிவு செய்து இருந்த அறையில் தங்கவைத்து உள்ளார்.
மீண்டும் 19-11-2007-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு அவர் தங்கி இருந்த லாட்ஜக்கு சென்று இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் பார்த்தது தெரியவருகிறது.
இவ்வாறு அகிலாண்டேசு வரியுடன் சேதுமணி மாதவன் தொடர்ந்து போன் மூலம் நேரிலும் தொடர்பு கொண்டதன் காரண மாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரியவந்ததால் சேதுமணி மாதவனை நவம்பர் 21-ந்தேதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினோம்.
குற்றவழக்கில் தொடர் புடைய ஒரு எதிரியை அதுவும் பெண்ணை காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்து லாட்ஜில் தங்கவைத்து மறுபடியும் அவருடன் இறப்பதற்கு முன்பும் சென்று பார்த்துவந்த முறைகேடான செயலுக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிக்கைபடி தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாஷ் குமார் இன்ஸ்பெக்டர் சேது மணிமாதவனை சஸ் பெண்டு செய்தார்.... முகநூல்பதிவு சரவணாகுமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக