செவ்வாய், 24 ஜனவரி, 2017

பார்ப்பனர்களால் போற்றப்படும் ஜெயாவும் மிரட்டப்படும் சசிகலா, நடராஜன், பன்னீர் வகையறாக்களும் அதே குட்டையில் ஊறிய ஊழல் மட்டைகள்தான்

 பவ்யமா நடந்து, அளவோடு சிரித்து, மௌனமாய் இருக்கும் பன்னீர்செல்வம் என் அபிப்பிராய படி தற்போது மத்திய அரசு கையில். அரசியலில் எதுவும் சாத்தியம் என்கிற விதியோடு, அவரை underestimate செய்கிறோமா என தோன்றியது.
காரணம், சதா பிரமணியத்தை திட்டி நமக்கே சலித்து விட்டது, எல்லாத்துக்கும் அதுவா காரணம் என்று நினைக்கும் போது, நம் திகட்டலுக்கு கொஞ்சமும் அசராமல், ஈவு இரக்கமில்லாமல் சந்தேகப்பட வைக்க கூடிய அரசியல் தான் இந்தியாவின் பிராமண அரசியல்.
துக்ளக் விழாவில், சசிகலாவிடம் அதிமுகவை விட முடியாது என குருமூர்த்தி சூளுரைத்ததில் இருந்து லீட் எடுத்து நேற்று நடந்தவை வரை பார்த்தால், ஓரளவு தெளிவான பார்வை கிடைக்கிறது.
பிராமண அரசியலின் பலம், பலவீனம், இரண்டுமே சொல்லி வைத்தார் போல ஒரே போல இயங்குவது, ஜெயா உயிரோடு இருந்தவரை பாத நக்கிகளாக இருந்தவர்கள், இறந்ததும் அதுவரை பேசாத ஊழல் குறித்து பேசியதும், நேற்று கலவரத்தில் சிலவற்றை திட்டமிட்டு மறைத்து, மேலோட்டமாக anti social element பேசிக்கொண்டிருந்தார்கள்.
இவர்களில் இருந்தே நாம் நடப்பது என்னவென்பதை புரிந்துகொள்ள முடியும். சசிகலா நடராசன் கையில் அதிகாரம் போனதுக்கு, அதிமுகவில், பாஜக தேர்ந்த எடுத்த ஆள் பன்னீர், அவருக்கு என்ன டீலிங் சொல்லி கையுக்குள் போட்டு இருக்கிறார்கள் என்பது காலம் சொல்ல வேண்டிய பதில்.

எந்த அரங்கில் ஜெயாவுக்கு ஒவ்வொருவருடம் விசிலடிக்கப்பட்டதோ, அதே பிரதமர் பேசும் அரங்கில், அதிமுக தலைமைக்கு எதிராக பேசப்படுகிறது. சசிகலா, நடராஜன் மீது நமக்கு அபிப்பிராயம் இல்லை, ஆனால் ஜெயாவை புனிதப்படுத்தி சசிகலாவை மட்டும் மட்டுப்படுத்துவதும், சசிகலாவும், நடராஜனும் எந்த காரணத்திற்காக தலைமையில் இருந்து விலக வேண்டும் என உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டு கருத்து சொல்கிறார்கள்; சொல்பவர்களின் நேர்மை என்ன; என்ன காரணத்திற்காக சொல்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்ப்பு என்பது ஒரே வடிவிலானாது அல்ல, காந்தியை இருவர் எதிர்த்தார்கள், ஆனால் யார் கொன்றார்கள் என்கிற அரசியல் தான் இந்தியாவில் மீண்டும் மீண்டும் நிறுவப்படுகிறது.
பன்னீர்செல்வமும், சசிகலாவும் ஒரே கட்சி, ஒரே சமூகம், நெடிய அரசியல் பயணம் செய்தவர்கள். சாதிக்காரன் டா என சாதிக்காரனை விட்டு கொடுக்காமல் இருப்பவர்களில் தான், கணிசமானோர் சாதியத்துக்கு ஆதரவாக இருக்கும் பாஜகவையும் ஏற்று கொள்ளும் மனோபாவத்தோடு இருக்கிறார்கள், ஆனாலும் பிரித்தாளும் சூழ்ச்சியை தனது ரத்தத்திலேயே வைத்திருக்கும் பிராமண அரசியலின் தந்திரத்தை அறிந்திருக்காத வண்ணம் மழுங்கி போய் கிடக்கிறார்கள்.
நேற்று நடந்த கலவர டைப், சந்தேகமே இல்லாமல் மினி வடஇந்திய கலவர டைப், ஒரு இடத்தில் ஆரம்பித்தால் அப்படியே பரவும் என்கிற கணக்கு தோற்று போயுள்ளது, இங்கே இருக்கும் பாஜக சோப்லாங்கிகளை வைத்து அரசியல் செய்யமுடியாது என மோடி தெளிவாய் தெரிந்து வைத்துள்ளார், புறவாசல், பிரித்தாளும் சூழ்ச்சி, அவர்களுக்கு புதிதும் இல்லை,
காலம் தான் உறுதி செய்ய வேண்டும்.முகநூல் பதிவு வாசுகி பாஸ்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக