சனி, 21 ஜனவரி, 2017

போராட்ட தளம் வலிமையாக உருவாகி விட்டது ... தொடர்ந்து எழும் சமுக பிரச்சனைகளுக்கு போராட களம் அமைந்து விட்டது ? அரசுகள் அதிர்ச்சி!

தமிழக இளைஞர்கள் போராட்டம் < மத்திய - மாநில அரசுகள் அதிர்ச்சி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம், மத்திய - மாநில அரசுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக, மாணவ - மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள், போராட்டத்தில் குதித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அதனால், கடந்த ஆண்டைப் போல, பொங்கல் வரைபோராட்டம் இருக்கும்; பின் போராட்டம் பிசுபிசுத்து விடும் என, போலீஸ் அதிகாரிகள் நம்பினர். யாரும் எதிர்பாராதவிதமாக, போராட்டம் சூடுபிடித்துள்ளது. ஜாதி, மத பேத மின்றி, அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. அஹிம்சை வழியில் நடக்கும் போராட்டம், மத்திய - < மாநில அரசுகளையும், அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.< <இது குறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது:
/ சமூக வலைதளங்கள் உதவியுடன், மிகப்பெரிய போராட்டத்தை,மாணவர்கள் மற்றும் இளைஞர் கள் நடத்தி வருகின்றனர். இந்த எழுச்சி, இந்த போராட் டத்துடன் முடிந்து விடுமா என்பது சந்தேகம். அடுத் தடுத்து சமூக பிரச்னைகளுக் காக, இது போன்ற போராட்டங் கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
போராட் டத்தை முன்னெடுத் தோர், போராட்டத்தில் வீரிய முடன் பங்கேற் றோரின், மொபைல் எண், இ - மெயில் முகவரி போன்றவற்றை சேகரித் துள்ளனர். இதன் மூலம், எளிதில் அடுத்த கட்ட போராட்டங் களை, அவர்கள் துவக்க முடியும்.

எனவே, இப்பிரச்னையை அரசு, கவனமாக கையாள வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -   தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக