வியாழன், 5 ஜனவரி, 2017

நடிகர் ரஜினிகாந்த் கிறிஸ்தவராகி விட்டார்? எம்மதமும் சம்மதமோ?

நடிகர் ரஜினிகாந்த் கிறித்துவ மதத்துக்கு மாறிவிட்டார் என்று பல தகவல்கள் வந்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தற்போது அந்த தகவல் உண்மைதான் என்பதைபோல வாட்ஸாப்பில் சில புகைப்படங்கள் பரவி வருகின்றன.
அதுவும் முழுக்க ஞானஸ்நானம் (பேப்டிசம்) எடுக்கின்ற படமும், வெளிநாட்டு கிறிஸ்தவ போதகரிடம் ரஜினிகாந்த் ஜெபம் செய்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட படமும் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி பேப்டிசம் எடுக்கொண்டார் என்றும் குறிபிடப்பட்டிருக்கிறது.இது குறித்து ரஜினி ரசிகர்களில் மிக முக்கியஸ்தரிடம் கேட்ட போது, .தலைவர், கிறிஸ்டியனாக மாறவில்லை. கபாலி படம் முடிந்த பின்னர் அவர் நியூயார்க் சென்று அங்கு 50 நாட்கள் தங்கினார். அப்போது அங்குள்ள சர்ச்சுக்கு அவரை அழைத்திருக்காங்க. அங்க போகும் போது சும்மா அப்படி நடந்தது.
அவர் அப்போதே அங்குள்ள புகழ் பெற்ற சச்சிதானந்தா கோவிலுக்கும் போனாரே என்கிறார் அப்பாவியாய். இதுகுறித்து ரஜினி தரப்பில் கேட்டுவிட முயன்றோம் ஹீம்… ஒரு பதிலையும் காணோம். எனவே இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
உடல்நலம் சீரடைந்தால் மதம் மாறுவதாக வேண்டிக் கொண்டதாக தகவல் அதனடிப்படையில் தான் நியூயார்க் சபையில் ஞானஸ்நானம் (பேப்டிசம்) எடுத்துக் கொண்டார் என்கிறார்கள். லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக