சனி, 21 ஜனவரி, 2017

போராட்டம் பண்ண கத்துகிட்டாங்கல்ல .. இனி வேற வேற வேற.... இஷுக்களுக்கும் கண்டிநியூ பண்ணலாம்..ஆமா!


மதியாதோர் தலைவாசல் மிதியாதேனு ஔவையார் சொல்லிருக்காங்க, நம்ம ஓபிஎஸ் அவர்கள் வாடிவாசல் பூட்ட நான் தான் உடைப்பேன்னு ஒத்த காலுல நிக்கிறாரு. ஔவையார் பேச்ச நாம ஏன் கேட்கனும்னு நினைச்சுருப்பார் போல. மத்தபடி மக்கள் எல்லாம் அவர் மேல மானாவாரியா மரியாதை(!) வச்சிருக்காங்க., சிரிச்ச முகமா போய் வாடிவாசல திறக்க வாழ்த்துக்கள் ஓபிஎஸ் அவர்களேனு அவருக்கு மட்டும் ஒரு அசிரிரீ கேட்டிருக்கும் போல. ஆனா பன்னீருக்கு போட்டியா ஒரு பழ வியாபாரியை இறக்க தயாராகிட்டாங்க நம்ம மக்கள். அவர் போகட்டும் நீங்க அப்டேட்ஸ பாத்துருங்க

\\@Kozhiyaar
நாட்டின் வரலாறு 2017 முன், 2017 பின் என்று மாற்றி எழுதப்பட்டிருக்கிறது!!
#AmendPCA
#SaveJallikattu\\
\\@Deva_twits
3 வருசமா மஞ்சுவிரட்டு, பந்தயம் நடக்கல அதான் மழை பெய்யல பஞ்சம் போகுதுனு ஒரு பாட்டி சொல்லுது!\\

\\@CreativeTwitz
ஒருதடவ போராட்டம் பண்ண கத்துகிட்டாங்கல்ல .. அடுத்தடுத்து தேவைகளை செய்யலைன்னா கண்டிநியூ பண்ணலாம்..!\\
\\@Jeyachandra Hashmi
ஜல்லிக் கட்டு தடையை உடைத்த சின்னம்மாவுக்கு தமிழக மக்கள் நன்றி - ஜெயாடிவி.
ஆமா... அப்படியே மெரினா பக்கம் வந்தீங்கன்னா நேர்லயே சிறப்பா நன்றி சொல்லிடலாம் !!\\
\\@KartikTweaks
எங்கப்பா எனக்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பத்தி சொன்னாரு
நாம் நம் தலைமுறைக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தை பத்தி சொல்லலாம்..
#Jallikattu\\

\\@saravananucfc
பேய் படமா எடுத்த லாரன்ஸ் அண்ணன் மனசுல சாமியா மாறிகிட்டு இருக்கார்.படத்துல அநியாயத்துக்கு குரல் கொடுத்த அத்தனை ஹீரோவும் அயோக்கியனா தெரியுறாங்க\\
\\@ivanganeshk_s
மெரீனாவில்
புதைப்பதை
நிறுத்திவிட்டு
விதைப்பதை
துவங்கிவிட்டோம்...
விளைவது நிச்சயம்
வெற்றியே...!\\

\\@Divya Bharathi
பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி, வரிசையில அடுத்து சல்லிகட்டு புரட்சியாம்....
அய்யோ வேகமா சல்லிகட்டை நடத்திடுங்கப்பா\\
\\@Saba Sabastin Sabas
அழுவுற கொழந்தய்க்கு வாழைப்பழம் குடுக்குற கத\\

\\@கருத்து கந்தசாமி
பக்கார்டிக்கும் வோட்காவுக்கும் இனிமேல் 7அப் மற்றும் ஸ்ப்ரைட் போன்ற அந்நிய நாட்டு பானங்களை தேடமாட்டோம் என்று இந்த வேளையில் உறுதி எடுத்துக்கொள்வோம். இளநீரையே பயன்படுத்துவோம். இரண்டும் ஒரே விலைதான்\\
\\@Kavi Arasu
உழைக்கும் மக்களாய் ஒன்று கூடுவோம்... மாட்டிறைச்சி எம் உணவு, மஞ்சுவிரட்டு எம் உணர்வு\\
\\@@writernaayon
ஓபிஎஸ்ஸ தொறக்க வைக்கிறதுக்கு, ஒரு பழ வியாபாரி வண்டியோட வந்து பழம் எடுத்துக்கோங்க தம்பிகளான்னு சொன்னாரு பாருங்க, அவர தொறக்க வைக்கலாம்.\\

\\@Raja Karur
போற போக்கை பாா்த்தா
அம்மாவின் சமாதியை காண ஆயிரக்கணக்கில் மெரீனா வில் திரண்ட இளைஞா் படை ன்னு
சொல்லப்போறாங்க பாருங்க\\
\\@Kavin malar
திரும்பத் திரும்ப பெண்கள் போராட்டத்தில் பாதுகாப்பாக இருந்தார்கள் என்று ஆண்களும், பெண்களும் பதிவு செய்வதை சகிக்க முடியவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதை செய்தியாகப் பதிவு செய்யலாம். ஒன்றுமே நடக்கவில்லை என்பது ஏன் செய்தி ஆகிறது?
கேட்டால் ஒப்பீட்டளவில் தமிழ்நாடு அல்லது சென்னை மற்ற இடங்களைவிட பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை தெரிவிக்க எழுதினோம் என்கிறார்கள்.
இயல்பான ஒரு விஷயத்திற்கு என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது? சந்தர்ப்பம் கிடைத்தால் பெண்களை ஆண்கள் எதுவும்.செய்யலாம், அப்படி வாய்ப்பு கிடைத்தும் எதுவும் செய்யவில்லை என்று சொல்வது ஒரு பெருமையா? அப்படியெனில் இப்படியான சந்தர்ப்பங்களில் பெண்களை ஆண்கள் ஏதாவது செய்வது இயல்புதான் என்றாகிறது. இயல்புக்கு மாறாக எதுவும் செய்யாமல் இருப்பது பெருமைக்குரியது என்றாகிறது. இப்படி தொடர்ந்து பதிவு செய்வது தவறு செய்யும் ஆண்களுக்கு லைசென்ஸ் வழங்குவது போல் இல்லையா?
தமிழ்நாட்டில் பாலியல் வன்முறைகள் நடப்பதில்லையா? எத்தனை பெண்கள்! இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு இந்த வெட்டிப் பெருமை எதற்கு? இப்போதுதான் பெண்பிள்ளைகள் வீதிக்கு வருகிறார்கள். ஆண்களுக்கு பாராட்டு என்கிற பெயரில் மறைமுக் லைசென்ஸ் கொடுக்காதீர்கள். இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதவேண்டுமென்றால் வேறு விஷயங்களை எழுதுங்கள்.
நான் மிகவும் மதிக்கும் சில தோழர்கள் கூட இந்த மாதிரி 'பாதுகாப்புப் பெருமை' பேசுவதைப் பார்க்கையில்தான் இதை எழுதவேண்டும் எனத் தோன்றியது.\\
-லாக் ஆஃப் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக