ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு .... அறவழியை விட்டு விடாதீர்கள் .. மக்களும் உங்களை கை விட மாட்டார்கள்

ஹிப் ஹாப் , விவேக் இருவரும் தமிழக அரசின் நிலை பாடை எடுக்கும் நிர்பந்தம் என்ன?! மேலும் பல ஆங்கில சேனல் மற்றும் தமிழ் சேனல் வழக்கம் போல ஜிங் ஜாக் ஜில் அடிக்க தொடங்கி விட்டதே ..
இன்று மெரினா சென்று 6 மணி நேரம் கள நிலவரம் அறிந்த போது கண்டவை இவை :
🔵இளைஞர்கள் குழு குழுவாகி இசை இசைத்தும் பாட்டு பாடியும் ஒரு விழா போல போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார்கள்
🔵இதில் அதிகமாக மிக மோசமாக மோடியை திட்டுகிறார்கள் அடுத்தபடியாக அதிகமா கிண்டல் செய்வது OPS மற்றும் சசிகலா ..
🔵ஏராளமான பெண்கள் குழு குழுவாக மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷம் போட்டும் பீட்டா தடையை வேண்டி நிரந்திர தீர்வு கோருவதை காண முடிகிறது .
🔵பெண்கள் குடும்பம் குடும்பமாக குழந்தையுடன் சாராய் சாரையாக வந்து போராடும் இளைஞர் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்து செல்கிறார்கள் ..
🔵இளைஞர்கள் சாலைகள் ஒழுங்கு படுத்தி போலீஸ் துறை வேலையை கையில் எடுத்து பொறுப்புடன் எடுத்து செல்கிறார்கள் ..
🔵மிகவும் அதிசயித்த விஷயம் பெண்களை கண்ணியமாக நடத்துவது .. ஒரு இடத்திலே பெண்கள் இசை இசைத்து ஆடுவதை எனது reporter போட்டோ எடுக்கும் போது வேண்டாம் சார் அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்றார்கள் ..
🔵அரசு செய்தி துறை மற்றும் media மூலம் ஏதோ ஜல்லிக்கட்டு நடந்தது போலவும் ., போராட்ட குழு எதோ குடியரசு தினத்தை சீர் குலைக்க நுழைவது போலவும் ஒரு பிம்பம் உருவாக்கி வருகிறார்கள் ..

அரசின் பிம்ப திமிரை உடைத்தது தானே ஜல்லிக்கட்டு காளையின் வெற்றி ..
எழுத்தாளர் சரவணன் மத்திய அரசு விருதை திருப்பி தருகிறார் ..பத்ம ஸ்ரீ விருதை வைத்து கொண்டு என்ன கிழித்து கொண்டு இருக்கிறார் என்று விவேக் அவரை கேட்டு கொள்ளட்டும் ..
ஹிப் ஹாப் கூப்பிட்டு அரசு கொடுத்த மரியாதையை ஏற்று கொண்டு அவர் பாதை மாறி விட்டார் என்று தகவல் வருகிறது ...
சினிமா துறை .,அதிகார துறை அரசு துறை எல்லாரையும் அதிர வைத்தியுள்ளது மாணவர்கள் போராட்டம் என்பது தான் சத்தியம் ..
மாணவர்கள் தொடர்ந்து அமைதியுடன் போராடுவார்கள் என்ற நம்பிக்கை இன்று கண்ட செய்தி மூலம் ஊர்ஜிதம் ஆகியுள்ளது ..
நாங்கள் middle east asia இருந்து வந்த குடும்பத்தின் பெண்மணியை பேட்டி எடுக்கும் போது "சார் அரசு இப்படியே ஏமாற்றி கொண்டு இருந்ததால் என்ன செய்வது "என்று ஒரு இளைஞர் பரிதமாக கேட்டார் .
அவரிடம் "காந்தி உப்பை தொட்ட போது வெள்ளைக்காரன் எப்படி பதறினான்என்பது நீங்கள் காளையை தொட்ட போது அரசு அதிகாரம் பயந்த போது உணர முடிகிறது ..காந்தி தொட்டது அறவழி இன்று நீங்கள் தொட்டதும் அறவழி ...
நியாயம் தர்மம் வெற்றி அடைய காலம் எடுக்கும் ஆனால் நிச்சயம் வெல்லும் ..உப்பு போராட்டம் தோற்கவில்லை அது சரித்திரம் படைத்தது .. உங்கள் காளை போராட்டமும் சரித்திரம் படைக்கும் ..
அறவழியை விட்டு விடாதீர்கள் .. மக்களும் உங்களை கை விட மாட்டார்கள் ..இது தான் சத்தியம் . என்றேன்
குழப்பம் தெளிந்த மனதுடன் சென்றது அவர் மட்டுமல்ல  முகநூல் பதிவு  வெங்கட் ராமனுஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக