செவ்வாய், 10 ஜனவரி, 2017

சாப்பாடு சரியில்லை என்று சொன்ன ராணுவ வீரர் தொலைந்தார்” கடும் நடவடிக்கை!

இந்திய ராணுவம் கடும் கட்டுப்பாடுகள் நிறைந்தது. எல்லா வீரர்களும் 24 மணி நேரமும் மொபைல் போன்களை கூட பயன்படுத்த முடியாது.
அதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் படை தான் பி.எஸ்.எஃப். எல்லைப் பாதுகாப்பு படை.
இந்த படையின் வீரர் தேஜ் பகதூர் யாதவ், வீரர்களுக்கு சாப்பாடு வழங்குவதில் ஊழல் நடைபெறுவதாகவும், மோசமான உணவு வழங்கப்படுவதாகவும் பேசும் வீடியோ நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். தேஜ்பகதூர் குற்றம்சாட்டியது மத்திய மோடி அரசை அல்ல. ராணுவ உயர் அதிகாரிகளைத் தான்.
இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை பாய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. முதல் கட்டமாக அந்த ராணுவ வீரர் குறித்து பி.எஸ்.எஃப் சரமாரி குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
அவர் குடித்துவிட்டு அந்த வீடியோவில் பேசியதாகவும், அவர் குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவர் என்றும் கூறியுள்ளது. உயர் அதிகாரிகளுக்கு உரிய மரியாதை தரமாட்டார் என்றும் இதனால் அவரை தலைமை முகாமில் வைத்து உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
முன் அனுமதி இல்லாமல் விடுப்பு எடுப்பார் என்றும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது;  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக