ஓ பி எஸின் இந்த அவசர சட்ட நாடகத்தின் ஆயுள் ஒரு வாரத்துக்கு மட்டுமே.
அதற்குள் ஜல்லிக்கட்டு ஒப்புக்கு நடத்திவிட்டு... மாணவர் போராட்டங்களை கலைந்துபோக விடலாம்
போராட்டக்காரர்கள் மோடிக்கும் பன்னீருக்கும் நன்றி நன்றி நன்றி என்று புகழ்மாலை சூட்டலாம்.
அதன் பிறகு வழக்கம்போல உச்சநீதிமன்ற தீர்ப்பும் பீட்டாவின் தர்பாரும் தொடரும்....
மறுபடியும் வரும் பொங்கலுக்கு இதே நாடகம் மீண்டும் அரங்கேறும்.
அப்போது இந்த மாணவர் படை ஒன்று திரள்வது சந்தேகமே..
இறுதிவரை தமிழின எதிரி மோடி அரசு காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலிலிருந்து நீஎக்கப்போவதுமில்லை..
பீட்டாவை தடை செய்யப் போவதுமில்லை.
அவசர சட்டம் ஒரு கண்துடைப்பு ஏமாற்று நாடகம் முகநூல் பதிவு சென்னை தாமோதரன்
ஜல்லிக்கட்டு தொடர்பாக எழுந்த எழுச்சியை அடுத்து, அவசரச் சட்டத்தை இயற்றக்கோரி நேற்று மோடியை சந்தித்த பன்னீர் செல்வத்துக்கு திருப்தியான பதில் கிடைக்காதநிலையில், டெல்லியிலேயே அமர்ந்து அதிகாரிகள், தலைமை வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அவசர வரைவுச் சட்டத்தை தயாரித்து, நள்ளிரவே அதை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவிட்டு சென்னை திரும்பினார் முதல்வர் பன்னீர்செல்வம்.
பன்னீர்செல்வம் சென்னை வந்தபிறகு உள்துறை அமைச்சரை சந்தித்த அதிமுக எம்.பி.,க்களிடம் ராஜ்நாத் சிங் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்ற தகவலை ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இப்போது ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்தால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள்ளாகவோ அல்லது நாளையோகூட அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதியால் இச்சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும். இந்த அவசர சட்டத் திருத்தத்தில் மிருக வதை தடுப்புச் சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும். ஆனால் அதை எதிர்த்து யாரேனும் நீதிமன்றம் சென்றாலும் நீதிமன்றம் அதற்கு உடனடியாக தடை போடாது. அதற்குள் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடந்துவிடும். ஆனால் அடுத்த வருடம் நடப்பது கேள்விக்குறிதான். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக