ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஜால்ராக்கள் புடைசூழ ஸ்டாலின் ? குஷ்பு அழகிரி ....கனிமொழி , டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெ.அன்பழகன்

திமுக செயல் தலைவரான பிறகு மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த 80 ஆண்டுகளாக அரசியலில் ஓய்வின்றி இயங்கி வரும் கருணாநிதி, 48 ஆண்டுகளாக திமுக தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 93 வயதிலும் இடைவிடாது கட்சிப் பணியில் ஈடுபட்ட வந்த அவர், கடந்த 4 மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 2 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கியுள்ளார். 3 ஷிப்டுகளில் 6 ஆண் செவிலியர்களும், மருத்துவர்களும் கருணாநிதியைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால் அவர் எவ்வித அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் முழு ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இளைஞரணிச் செயலாளர், துணைப் பொதுச்செய லாளர், பொருளாளர் என கட்சியி லும், சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகர மேயர், உள் ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் அவர். கடந்த 2011 தேர்தலில் திமுக தோல்வி அடைந்தபோது சட்டப் பேரவை திமுக கட்சித் தலைவராக செயல்பட்டார். தற்போது எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிறார்.
ஆனாலும், கடந்த 50 ஆண்டு களாக கருணாநிதி தலைமையின் கீழ், அவரது வழிகாட்டுதலில் செயல்பட்டு வந்த ஸ்டாலின், தற்போது செயல் தலைவராக முழு அதிகாரத்துடன் முதல்முறையாக செயல்படத் தொடங்கியுள்ளார். கருணாநிதியைப் போலவே சுறு சுறுப்பாக செயல்படும் அவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந் தாலும் முதல்வரை சந்திப்பது, குடி யரசு தின விழாவில் பங்கேற்பது, அரசியல் எதிரிகளிடமும் நட்பு பாராட்டுவது என அரசியல் நாகரிகத்துடன் செயல்பட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையில் அதிமுக அரசை விமர்சித்து பேரவையில் பேசிய அவர், ஜல்லிக்கட்டு சட்டத்துக்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஆனால், இத்தகைய பெருந்தன் மையை அவர் கட்சியில் கடைபிடிப்ப தில்லை என்கின்றனர் திமுகவினர். கருணாநிதியைப் போல அனை வரையும் அரவணைக்காமல் அதிமுகவில் இருந்து வந்த எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, எதிர் கால அரசியல் நலன்களுக்காக தன்னிடம் நெருக்கம் காட்டும் முதன்மைச் செயலாளர் துரைமுரு கன் போன்றோரின் ஆலோசனைப் படி ஸ்டாலின் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெ.அன்பழகன், ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான மா.சுப்பிரமணியன் போன்றோர்கூட ஓரங்கட்டப்பட்டுள் ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து வந்தவர்களிடம் ஸ்டாலின் காட்டும் நெருக்கம் தீவிர திமுகவினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கட்சியில் எதிரும், புதிருமாக உள்ளவர்களை அரவணைத்துச் செல்வதில் கருணாநிதி வல்லவர். சாதாரண கிளைச் செயலாளரைக்கூட இழக்க விரும்ப மாட்டார். சுற்றுப் பயணங் களின்போது சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளை தனது காரிலேயே அழைத்துச் சென்று பிரச்சினை களுக்கு தீர்வு காண்பார். கருணாநிதி யிடம் கண்டிப்பும், கனிவும் இருக்கும். ஆனால், ஸ்டாலின் ஒரு தரப்பிடம் கனிவும், மற்றவர்களிடம் கண்டிப்பும் காட்டுகிறார். இதனால் கட்சியில் பலர் இனி உழைப்புக்கு மரியாதை கிடைக்காது என நினைக்க ஆரம்பித்து விட்டனர்’’ என்றார். ஸ்டாலினின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட வர்கள் கருணாநிதியோடு அவரை ஒப்பிட்டு வேதனைப்படுகின்றனர் என்றார் ஒரு திமுக நிர்வாகி.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய அவர், ‘‘ஸ்டாலின் தனது சுற்றுப்பயணங்களின்போது குடும்பத்தினர், வேண்டிய கட்சி நிர்வாகிகளை மட்டுமே அழைத்துச் செல்கிறார். கட்சிக்கு தொடர்பில் லாதவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர் என வருங்கால அரசி யல் நலன்களை குறிவைத்து செயல் படும் நிர்வாகிகளுடன் மட்டுமே ஆலோசனை நடத்துகிறார். இதன் மூலம் கட்சி, ஸ்டாலினின் தீவிர விசு வாசிகள் ஓரங்கட்டப்பட்டு வருகின் றனர். இதனால் ஸ்டாலின் தனது குடும்பத்தில் மற்றவர்களின் எதிர்ப் பையும் சம்பாதித்துள்ளார். இது எதிர்காலத்தில் அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றார்.
கருணாநிதியை சந்திக்க முடி யாது என தெரிந்தாலும் திமுக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கோபாலபுரம் செல்வதை வழக்க மாக கொண்டிருந்தனர். ஆனால், ஸ்டாலின் செயல் தலைவரான பிறகு அவரது கோபத்துக்கு ஆளாக நேரிடும் எனக்கருதி கோபாலபுரம் செல்லாமல் ஆழ்வார்பேட்டைக்கு மட்டும் செல்வதாக திமுகவினர் வேதனை தெரிவிக்கின்றனர். tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக