வெள்ளி, 13 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு ...தடையை மீறுவோம் : ஸ்டாலின் தகவல்

சென்னை:''ஜல்லிக்கட்டு நடத்த, அவசர சட்டம் நிறைவேற்றா விட்டால், தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஆலோசிப் போம்,'' என, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
 உச்சநீதிமன்ற தடையால், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு, ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக, மத்திய அரசு அவசர சட்டம் அமல் படுத்த வேண்டும் எனகோரி,தமிழகம் முழுவதும்,போராட்டங்கள் நடந்து வருகின்றன.    எந்தவித அசம்பாவிதமும் இன்றி, வரைமுறைகளை வகுத்து, ஜல்லிக்கட்டு தடையை மீறி, நடத்துவது தவறில்லை. சுப்ரிம் கோர்ட்டின் பேச்சை கேட்க தேவை இல்லை என்று பலமுறை கர்நாடகா நமக்கு எடுத்து காட்டி உள்ளது. இந்தியாவின் சுப்ரிம் கோர்ட் வடிவேலு கோர்ட்டாக மாறி கொண்டு இருக்கிறது.

சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லுாரி மாணவர் கள், நேற்று காலை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். இதில், பங்கேற்ற, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்பேசியதாவது: பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மத்திய அரசு, அவசர சட்டம் நிறை வேற்ற வேண்டும்; இல்லாவிட்டால், தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் ஆலோசித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். இன்று ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிக்கை: இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு நடப்பதில், எந்த தடையும் இருக்காது என நம்புவதாக,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பல முறை தெரிவித் தார்.
முதல்வர் பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில், 'ஜல்லிக்கட்டு நடப்பதை, தமிழக அரசு நிச்சயம் உறுதி செய்யும். அதில், எள்ளளவும் பின்வாங்காது' என்றார்.
 தற்போது, ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என, உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்ட நிலையில், முதல்வரும், மத்திய அமைச்சரும், என்ன பதில் சொல்ல போகின்றனர்;
தி.மு.க.,வை பொறுத்தவரை, ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஜல்லிக்கட்டு நடக்க உரிய நடவடிக்கையை, உரிய நேரத்தில் எடுக்க தவறிய, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தி.மு.க., சார்பில், இன்று காலை, மாவட்ட தலைநகரங்களில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக