ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தது



ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாணவர்கள், இளைஞர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்து வருவதால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுமான என கேள்வி எழுந்து உள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும். தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மனுவில் கூறப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டுகான தடையை நீக்கி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’ போன்ற அமைப்புகள் வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக