வெள்ளி, 6 ஜனவரி, 2017

தமிழக விளையாட்டு வீரர்கள் மீது டெல்லி விளையாட்டு வீர்கள் தாக்குதல்!


டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய கையெறி பந்து போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்களை, டெல்லி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தேசிய கையெறி பந்து போட்டியின் கால் இறுதிச் சுற்றில், சத்திஸ்கர் அணிக்கு ஆதரவாக நடுவர்கள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டுள்ளனர். இதை தமிழக அணியினர் தட்டிக் கேட்டனர். அப்போது, அணியின் பயற்சியாளருக்கும் விளையாட்டு ஒருங்கினைப்பாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மைதானத்தில் இருந்த தமிழக வீரர்களைத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அணியின் பயிற்சியாளர் ஆசீர், “ 61 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கையெறி பந்து போட்டியில், தொடக்கத்திலிருந்தே தமிழக அணிக்கு எதிராக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டனர்’’ என தெரிவித்துள்ளார்.

’’தலைநகர் டெல்லிக்கு விளையாடுவதற்காக வந்த எங்களை தாக்கிய சம்ப்வம் மிகவும் வேதனை அளிக்கிறது’’ என தமிழக வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் விளையாட்டு ஒருங்கிணைபாளர்களின் உதவியுடன் நடுவர்கள் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது இது முதல்முறை இல்லை. கடந்த ஆண்டுகளிலும் இதுபோன்றே செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக வீரர்கள் மட்டும் அல்லாமல் தென்னிந்தியாவில் இருந்து சென்ற ஆந்திரா, கர்நாடகா மாநில விளையாட்டு வீரர்கள் விளையாடும்போதும் பாரபட்சமாகவே நடுவர்கள் செயல்பட்டனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழக விளையாட்டு வீரர்கள்களுக்கு, உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து தரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.  minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக