புதன், 18 ஜனவரி, 2017

பன்னீர்செல்வமும் சசிகலாவும் ஒன்றாக ஆயிரத்தில் ஒருவன் பார்த்தனர்! நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ... எம்ஜியாரும் ஜெயலலிதாவும் கெடுத்த தமிழகம்


தமிழ் சினிமா வரலாற்றில் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வில் மைல்கல்லாக விளங்கிய படம். பி.ஆர்.பந்துலு இயக்கிய இந்தப் படத்துக்கு இன்னும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மட்டுமல்லாது, பொதுவான சினிமா ரசிகர்களிடமும் வரவேற்பு உள்ளது. இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சமே முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த மெகாஹிட் படம் என்பதால் இப்படத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு.
நேற்று தொடங்கிய எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசும், தென்னிந்திய நடிகர் சங்கமும், எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களும் தனித்தனியாக கொண்டாடுகிறார்கள்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தியேட்டர்களில் எம்.ஜி.ஆர். நடித்த முக்கியப் படங்களை தினம் ஒரு காட்சியாக திரையிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அந்தவகையில் முதற்கட்டமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை திரையிடுகிறார்கள்.

சென்னை, கோவை, திருச்சி என தமிழகத்தின் பல நகரங்களில் டிஜிட்டல் முறையில் இத்திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.
சென்னையில் எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் நேற்று மாலை ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும், முதல்வர் பன்னீர்செல்வமும் சென்று இந்தப் படத்தை கண்டு களித்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் போராடும் இளைஞர்கள், முதல்வர் பன்னீர்செல்வம் போராட்டக்களத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தும் முதல்வர் வரவில்லை. எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று வழக்கமாக அதிமுக-வினர் எம்.ஜி.ஆர். சமாதிக்குச் சென்று மலரஞ்சலி செலுத்துவார்கள். ஆனால் இன்று காலை முதலே சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் தொடங்கிவிட்டதால் எம்.ஜி.ஆர். சமாதிக்குச் செல்வதை பன்னீரும், சசிகலாவும் தவிர்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக