திங்கள், 16 ஜனவரி, 2017

சமாஜ்வாதி சின்னம் பெயர் அகிலேஷுக்கே .. தேர்தல் ஆணையம் அறிவிப்பு .. முலாயம் மேல்முறையீடு!

சமாஜ்வாதி கட்சியின் பெயர் சின்னம் (சைக்கிள்) ஆகியன அகிலேஷ் யாதவுக்கு உரித்தானது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது . இதற்கு மேல்முறையீடு செய்ய போவதாக அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார் .மேலும் வரும் தேர்தலில் தனது மகன் அகிலேஷுக்கு எதிராக அவரின் தொகுதியில் போட்டி இடப்போவதகவும் தெரிவித்தார்.

முந்தய செய்தி : உத்தர பிரதேசத்தின் ஆளுங்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கிற்கும் அவரது மகன் மற்றும் உத்தர பிரதேசத்தின் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்குமிடையில் கருத்து மோதல் நடந்துவருகிறது. இதனால் சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் தலைமையிலும், முலாயம் தலைமையிலும் இரண்டாக உடைந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்திற்கு ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருவருக்குமிடையில் கட்சியின் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி நடைபெற்று வருகிறது.கட்சி சின்னம் யாருக்குவழங்க வேண்டும் என்ற முடிவை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ( அவுரங்க சீப் கதை?) 

இந்நிலையில், அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதியில் தானும் போட்டியிடப் போவதாக முலாயம்சிங் யாதவ் கட்சித் தொண்டர்களிடம் கூறியுள்ளார். மேலும், “நான் அகிலேஷிடம் பல முறை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டாலும் அதனை அவர் உணர மறுக்கிறார்.
கட்சியின் முக்கிய தலைவர்களை அகிலேஷ் மிகவும் புண்படுத்திவிட்டார். அவர் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக சமாஜ்வாதி கட்சியை மாற்றி வருகிறார். கட்சியை காப்பாற்ற, நான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டது. எந்த ஒரு சூழலிலும் சமாஜ்வாதி கட்சி அழிவதை அனுமதிக்க மாட்டேன். கட்சியையும் கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தையும் காப்பாற்ற முயன்று வருகிறேன். ஒரு வேளை என்னை மீறி
அகிலேஷ் செயல்பட்டால் தேர்தலில் தனியாக போட்டியிடுவேன் “ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக