ஞாயிறு, 8 ஜனவரி, 2017

பிறந்த வாழ்த்து வேண்டுமென்றால் வீட்டுக்கு வா ? கனிமொழிக்கு ஸ்டாலின் கூறியது? அர்த்த ராத்திரியில்.....?

சென்னை: தி.மு.க.,வின் மகளிர் அணி செயலராக இருக்கும் கனிமொழியின் பிறந்த நாளுக்கு, கடந்த ஆண்டை விட குறைவான எண்ணிக்கையிலேயே, தொண்டர்கள் வாழ்த்து சொல்ல வந்தது, ஸ்டாலின் தரப்பினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.கனிமொழியின் பிறந்த நாள் ஜன., 5. ஒவ்வொரு ஆண்டும், பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுவார். 2ஜி வழக்கில் சிக்கி, ஜெயிலுக்குச் சென்று திரும்பிய பின் ஒரே ஒரு வருடம் மட்டும், அவர் பிறந்த நாள் விழாவை விமரிசையாக கொண்டாடவில்லை.
 தமிழகத்தில் தொடர்ச்சியாக விவசாயிகள், வறட்சியால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். அதனால், என் பிறந்த நாள் விழாவை இந்தாண்டு கொண்டாடவில்லை என அறிக்கை வெளியிட்ட கனிமொழி, ஒவ்வொரு ஆண்டையும் போலவே, காலையிலேயே, தொண்டர்கள்; தலைவர்கள் தரிசனத்துக்காக, வீட்டு ஹாலுக்கு வந்து விட்டார். அவரின் அறிக்கையை கண்டு கொள்ளாத ஆதரவாளர்கள் பலரும் அஸ்தமனமில்லாத சூரியனே என்றெல்லாம் பெரிய பெரிய போஸ்டர்கள் மூலம், சி.ஐ.டி., காலனியையே அதகளமாக்கி இருந்தனர்
.
 கடந்த ஆண்டு, தி.மு.க., பொருளாளராக இருந்த ஸ்டாலின், சி.ஐ.டி., இல்லத்துக்கு வந்து கனிமொழியை வாழ்த்திச் சென்றார். இந்தாண்டு, அவர் கட்சியின் செயல் தலைவர் ஆகி விட்ட நிலையில், கனிமொழியை வாழ்த்த செல்லவில்லை. கனிமொழிதான், அவரை சந்தித்து வாழ்த்தும் ஆசியும் பெற்றார். இதற்கு முன்பாக, நிறைய குழப்பங்கள் நடந்ததாக, தி.மு.க., வட்டாரங்களில் இருந்து செய்தி கசிகின்றன. இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு வரையில் கட்சியின் பொருளாளராகவும்; இளைஞர் அணி தலைவராகவும் மட்டுமே ஸ்டாலின் இருந்தார். அதனால், கனிமொழிக்கு பிறந்த நாள் என்றதும், அவரை சந்தித்து வாழ்த்து சொன்னார். ஆனால், தற்போது அவர் கட்சியின் செயல் தலைவர் ஆகி விட்டார். கிட்டத்தட்ட தலைவர் மாதிரிதான். தலைவர், கட்சியின் மற்ற நிர்வாகிக்கு பிறந்த நாள் என்றால், அவரை தேடிச் சென்று வாழ்த்துவது முறையல்ல; அதனால், கனிமொழியை தன் வீட்டுக்கு வரச் சொல்லி, ஸ்டாலின் கூறிவிட்டார். என்ன இருந்தாலும், ஸ்டாலினின் சகோதரிதானே கனிமொழி. சகோதரியை கடந்த ஆண்டு வரை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன அண்ணன், இந்தாண்டு, செயல் தலைவர் ஆகி விட்டார் என்பதற்காக, அவர் வீடு தேடி சென்று வாழ்த்து; ஆசி பெறுவது சரியாக இருக்குமா என, கனிமொழி தரப்பில் ஏகக் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அதனால், ஸ்டாலினை சந்திக்காமல் இருந்து விடலாமா என்றும் யோசித்துள்ளார் கனிமொழி. இதையறிந்த குடும்பத்தினர், கனிமொழியை சமாதானப்படுத்தி, ஸ்டாலினிடம் ஆசி வாங்க அனுப்பி உள்ளனர். ஒருவித தயக்கத்துடனும்; கலக்கத்துடனுமேயே கனிமொழி, ஸ்டாலினை சந்தித்து திரும்பினார். இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக