செவ்வாய், 3 ஜனவரி, 2017

தம்பிதுரை ராஜினமா ? தினகரன் எம்பியாக வேண்டுமாம் . தம்பிக்கு துண முதல்வர் பதவி தருவதாக உறுதிமொழி?

சசிகலாவுக்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய, அமைச்சர் உதயகுமார் தயாராக இருப்பது போல, சசிகலா உறவினருக்காக, எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய, தம்பிதுரை முன்வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில், அவரது தோழி சசிகலா அமர்ந்துள்ளார். தற்போது, முதல்வர் பதவிக்கும் அவரே வர வேண்டும் என, அமைச்சர் உதயகுமார், முதல் குரல் எழுப்பினார். சசி, முதல்வரானால், தேர்தலில் போட்டியிட வேண்டும்.
ஆனால், ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களின் மனநிலை, சசிகலாவிற்கு எதிராக உள்ளது. ஜெயலலிதா நினைவிடத்திற்கு, ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து வரும் பெண்கள்,   தம்பி உடனே ராஜினாமா செய்யுங்கள் கரூர் மக்களின் கோபத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பளியுங்கள்..  திட்டங்கள் கட்டிடங்கள் எல்லாம் சரிதான் ஆனால் பேஸ்மென்ட்( மக்கள் ஆதரவு )  ரொம்ப வீக்காயுடிச்சு ... வந்து பாருங்க !


சசிகலாவிற்கு எதிராக கோஷமிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக, அங்கு போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது கடினம் என, உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். தயாராக உள்ளார்

எனவே, அவர் பாதுகாப்பான தொகுதியான, மதுரை, திருமங்கலம் தொகுதியில், போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.,வான, அமைச்சர் உதயகுமார், சசிகலாவிற்கு ஆதரவாக, தன்எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளார் என, கூறப்படுகிறது.


அதேபோல, டில்லியில் கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக, தன் குடும்ப உறுப்பினரை எம்.பி.,யாக்க, சசிகலா முடிவு செய்துள்ளார். அந்த நபருக்காக, தன் கரூர் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய, தம்பிதுரை முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்.பி., பதவியை ராஜினாமா செய்தால், அவரை எம்.எல்.ஏ.,வாக்கி, துணை முதல்வர் பதவி தருவதாக, சசிகலா தரப்பினர் உறுதி அளித்துள்ளனர்; அதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாகவே, அவர், சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

- நமது நிருபர்  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக