சனி, 14 ஜனவரி, 2017

சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு வீரவணக்கம் .... தமிழக ஜனநாயக உரிமைக்காக பதவி துறந்த முன்னாள் ஆளுநர்!

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார். பஞ்சாப் மாநில முதல்வரராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. இவர் தமிழகத்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். 1990-1991  காலப்பகுதியில் இவர் ஆளுநராக இருந்த போது திமுக ஆட்சியை கலைப்பதற்கு  பிரதமர் சந்திரசேகர் ,மத்திய் சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சாமி போன்றோர்திமுக அரசு விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுப்பதாகவும் அதனால்  சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக அறிக்கை தருமாறு பர்னாலாவை  நெருக்கினார்கள் ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்த வேண்டிய நிர்பந்தத்தால் அவர்கள் அன்று அப்படி நடந்து கொண்டார்கள். அதன் பின் பர்னாலாவை அவர்கள் சண்டிகாருக்கு மாற்றினார்கள் .
அதை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார் .
அச்சம்பவத்தின் பின்பு சட்டசபையில்  கலைஞர் பட்ஜெட்டை தாக்கல் செய்த பொழுது அதை அவர் வாசிக்க விடாமல்  பறித்து கிழித்தெறிந்து அடிதடி கலவரத்தில் அதிமுகவினர் ஈடுபட திமுகவினரும் பதிலடி கொடுக்க ஜெயலலிதாவின் துணியை பிடித்து இழுத்தார்கள் என்று ஜெயலலிதா  ஒரு திரௌபதி நாடகத்தை அரங்கேற்றினார். ஜெயலலிதாவோடு சேர்ந்து நாடகம் நடத்திய  திருநாவுக்கரசு கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் போன்றோர் பிற்காலத்தில் இதற்காக மனம் வருந்தி கலைஞரிடம்  பாவமன்னிப்பு கோரியது வரலாறு. 
 சு.சாமியும் ஜெயலலிதா விரும்பிய படி ஆட்சியை கவிழ்த்தார்கள் . அதன் பின் நடந்த தேர்தலில் ராஜிவ்காந்தி இறந்து விட அந்த பழியையும் திமுகவின் மேல் போட்டு ஜெயலலிதா வெற்றிபெற்றார் எந்த விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுத்ததால் திமுக ஆட்சியை பறி கொடுத்ததோ அதே புலிகளுக்கு திமுக ஆதரவே கொடுப்பதில்லை ஜெயலலிதாதான் ஈழத்தாய் என்று வைகோ நெடுமா சீமான் பாண்டியன் போன்றோர் சதா புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது தெரிந்ததே.


மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த 2004-2011  காலகட்டங்களில் தமிழகத்தின் ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தமிழக ஆளுநராக  பணிபுரிந்துள்ளார். லக்னோவில் சட்டம் பயின்ற அவர் இந்தியாவின் விடுதலைப்போராட்டத்திலும் பங்கேற்றவராவார். வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார். உடல்நலக் குறைபாடு காரணமாக சண்டிகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக