வெள்ளி, 13 ஜனவரி, 2017

சுவிஸ் ..இஸ்லாமிய மாணவிகளும் மாணவர்களுடன் ஒன்றாகத்தான் நீச்சல் கற்கவேண்டும் ! நீதிமன்றம் தீர்ப்பு


Switzerland: Court rules Muslim girls must swim with boys, ... has ruled Muslim parents must send their children to mixed swimming lessons.
சுவிட்சர்லாந்து பாடசாலைகளில் மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து தான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டியது எல்லா மாணவ மாணவிகளுக்கும் கட்டாய விதியாகவும் இருக்கிறது. இதில் பருவ வயதை எட்டும் வயதில் இருக்கும் மாணவிகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். ஆனால் இந்த விதியை மீறி சுவிட்சர்லாந்தில் இருக்கும் இரு துருக்கிய முஸ்லிம் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகளை ஆண் மாணவர்களுடன் நீந்த அனுமதிக்க மாட்டோம் என்றும், எங்கள் மத வழக்கப்படி இப்படி செய்ய இயலாது என்றும், இதற்கான சிறப்பு சலுகை எங்களுக்கு இருக்கிறது என்றும், தங்கள் பெண் குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். 2010 ம் ஆண்டில் இருந்தே குறிப்பிட்ட குடும்பத்தினருக்கும் பள்ளிக்குமிடையே இது குறித்து சர்ச்சை நடந்து வருகிறது.
கடைசியாக இந்த பிரச்சனை, மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்துக்கு சென்றது. அவர்கள் இன்று அளித்த தீர்ப்பில், முஸ்லிம் மாணவிகளாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மாணவர்களுடன் சேர்ந்து தான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சுவிஸ் பாடசாலைகளின் சட்டதிட்டத்தை அங்கீகரித்துள்ளது. மேலும் பெற்றோருக்குள்ள பொறுப்பை தட்டிக்கழித்த குற்றத்திற்காக அவர்கள் இருவரும் 1,400 சுவிஸ் பிராங்குகள் அபராதம் கட்ட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக