வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு போராளிகளுக்கு தண்ணீர் கொடுக்கும் தமிழ் பாசம்!..., ஆந்திரா போலீஸ் வருகை?

மதுரை, சென்னை, மற்றும் தமிழகமெங்கும் மாணவர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். தமிழரின் வீரக் கலையான ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். கொலைகார பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதற்கான போராட்டம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் கலவரத்தை ஒடுக்க அவ்வப்போது தடியடி நடத்த காவல் துறை தலைமை ஆணை இடுகிறது. ஆரம்பத்தில் அடித்து விரட்டிய  தமிழக காவல்துறை, மாணவர்களின் உணர்வுகளைப் பார்த்து மெய் சிலிர்த்தது. அவர்களை அடிப்பது இல்லை என்கிற முடிவிற்கு வந்துள்ளார்கள். இவர்கள் எனது சந்ததிக்காக போராடுகிறார்கள் என்கிற உணர்வு போலீஸ்காரர்களிடம் வந்து விட்டது. சொந்த செலவில் தண்ணீர் பாட்டில் வாங்கி தாகத்தில் வாடும் மாணவர்களுக்கு வாயில் தண்ணீர் ஊற்றும் உணர்ச்சி மிகு சம்பவங்களும் நடந்து வருகிறது. இது..இது தான் தமிழர் பண்பாடு. இதுதான் தமிழ் உணர்வு. அசத்துங்க போலீஸ் சல்யூட்.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக