சனி, 7 ஜனவரி, 2017

ஜோதிமணி போலீசில் புகார் ...பாஜகவினரின் ஆபாச சமுக வலை தாக்குதல்...


சென்னை: மோடியின் செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பை எதிர்த்து முகநூலில் பதிவு செய்ததை அடுத்து சமூக வலைத்தளத்தில் ஆபாச தாக்குதலுக்கு ஆளானதால் இந்த புகாரை அளித்துள்ளார் ஜோதிமணி.
ஜோதிமணி அகில இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். தன்னுடைய 22வது வயதில் ஊராட்சி ஒன்றியக்குழு செயலர் ஆனவர். பண மதிப்பு நீக்க நடவடிக்கை, சகிப்புத்தன்மை, காஷ்மீர் தாக்குதல் என மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.; முகநூலில் பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய பாஜக தலைவர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் சகோதரி தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோருக்கு ஒரு திறந்த அறிக்கை ஒன்றினை ஜோதிமணி வெளியிட்டு இருந்தார்.

ஜோதிமணிக்கு எதிராக ஓர் ஆபாச வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டு அதில் வக்கிர கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. போன் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் படுமோசமான ஆபாச தாக்குதல்கள் நடத்தி வருவதாக புகார் சொல்லியுள்ள ஜோதிமணி, ஆபாச தாக்குதல் பதிவுகளை வெளிப்படையாகவே வெளியிட்டுள்ளார்.
அவரைப்பற்றி பேஸ்புக்., வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் மிக கேவலமாக விவரித்து எழுதி இருப்பது, பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய ஆபாச தாக்குதலாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. அவரது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு செய்யப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் அநாகரிகத்தின் உச்சம். இதைக் கண்டு துவண்டு போகாமல் பொதுவெளியில் அதைப் பகிரங்கப்படுத்தியுள்ள ஜோதிமணி பெண்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்திருக்கிறார். இந்நிலையில் ஜோதிமணிக்கு எதிராக சிலர் ஒன்றிணைந்து ஆபாச வாட்ஸ் அப் குழு ஒன்றைத் தொடங்கி, அவர் குறித்த வக்கிரக் கருத்துகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்தக் குழுவில் ஜோதிமணியின் எண்ணையும் இணைத்துள்ளனர். இதைக்கண்டு துவண்டு போகாமல் பொதுவெளியில் அவற்றைப் பகிரங்கப்படுத்தி பெண்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டமாக அதை முன்னெடுத்திருக்கிறார் ஜோதிமணி.
தொடர்ந்து சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் சமூக ஊடகங்களில் என்ற ஹேஷ்டேகுகளில் ஜோதிமணிக்கு ஆதரவாகத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தன்னை மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியவர்கள், பாலியல் ரீதியாக கருத்துக்களை பதிவிட்ட வாட்ஸ் ஆப் குழுவை தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைபர் குற்ற தடுப்பு பிரிவிடம் ஒரு புகாரை அவர் அளித்துள்ளார்  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக