புதன், 11 ஜனவரி, 2017

தலாக் சான்றிதழ் வழங்க ஹாஜிக்களுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை .. சென்னை .

தலாக் சான்றிதழ் வழங்க தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாதர் சயீத் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்த வழக்கில், “இஸ்லாமிய தனி சட்டப்படி ஆண் மூன்று முறை “தலாக்” என்று கூறினால் விவாகரத்து செய்ய பட்டதாக ஏற்று கொள்ள படுகிறது. மற்ற மதத்தை ஒப்பிடும்போது இஸ்லாமிய பெண்கள் இதனால் பெரிதும் பாதிக்கபடுகிறார்கள். அதே போல ஹாஜிக்களுக்கு தலாக் சான்றுதழ் வழங்க எந்த விதமான அடிப்படை உரிமையும் இல்லை” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேசர் முன்பு விசாரணைக்கு வந்தது.” தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்களுக்கள் வழங்கும் தலாக் சான்றுதழ் என்பது தனி பட்ட கருத்து தான்.

அந்த சான்றுதழிக்கு எந்த விதமான சட்ட அந்தஸ்தும் கிடையாது, அதன் மூலம் தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கும் அதிகாரம் கிடையாது. நீதிமன்றத்தை அணுகி தான் விவாகரத்து பெற வேண்டும்.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தமிழகத்தில் உள்ள ஹாஜிக்கள் தலாக் சான்றுதழ் வழங்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கு அனுப்ப தலைமை பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் அந்த தலாக் சான்றுதழில் யார், எப்போது தலாக் சொன்னார்கள் என்பது போன்று தகவல் மட்டுமே இருக்கிறது. எந்த காரணத்திற்காக சொன்னார்கள், எந்த சூழலில் சொன்னார்கள் என்ற எந்த விவரமும் இல்லை அதை மாற்றி அமைக்க முஸ்லிம் சட்ட வாரியம் கால அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கை பிப்ரவரி 21 ஆம் தேதி வழக்கை தள்ளிவைத்தனர்.
அன்றாய தினம் தலாக் சான்றுதழை மாற்றி அமைப்பது குறித்தான பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சார்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. - சி.ஜீவாபாரதி நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக