செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டை திசைதிருப்ப நடைபெற்ற அத்தனை முயற்சிகளும் படுதோல்வி

அரசியல், சினிமா, கலாச்சாரம் இவை மூன்றும் வெவ்வேறு விஷயங்கள் என்று தமிழக மக்களின் மனதில் உருவாக்கப்பட்டிருக்கும் மாயையை தமிழர்கள் இப்போது உறுதி செய்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு எத்தனை வழிகளைப் பிரயோகப்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால் அதிர்ந்துபோவீர்கள்.
சாதாரண நடிகரில் தொடங்கிய இந்த அரசியல் சூப்பர்ஸ்டார் வரை நீண்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் மெம்பர் என்ற குறிப்புடன் அமர் பிரசாத் ரெட்டி என்பவர் தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் பற்றி மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கவேண்டுமென்றும், பா.ஜ.க கட்சியில் சேர்ந்து நீங்களே தமிழக அரசியலை முன்னெடுக்கவேண்டுமென்றும் ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். இந்த விஷயத்தில் பியூட்டி என்னவென்றால், இக்கடிதம் எழுதப்பட்டது கடந்த ஐந்தாம் தேதி. அதாவது 10 நாட்களுக்கு முன்பு. கீழே கையெழுத்தும் 5ஆம் தேதியே இடப்பட்டிருக்கிறது. இத்தனை நாட்கள் கழித்து இந்த கடிதம் வெளியிடப்பட்டதற்கு என்ன காரணம்? ரஜினி தமிழகத்தைப் பற்றி கவலைப்பட்டதற்கு சரத்குமாருக்கு ஏன் கோபம் வந்தது? ஜல்லிக்கட்டுக்காக போராட வெளிவராத சமத்துவக் கட்சி நண்பர்கள் ஏன் ரஜினியின் உருவபொம்மையை எரிக்க வெளியேவந்தது எப்படி என்ற கேள்விகள் தான் ‘சினிமா அரசியல்’ பற்றிப் பேசக்கூடியவை.

விஷாலில் தொடங்கி ஆர்யா, சிம்பு, திரிஷா, கமல், ரஜினி என ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சினிமாவைச் சேர்ந்தவர்கள் பல விதங்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மக்கள் எவ்வித டேக்-டைவர்ஷனும் எடுக்காமல் ஜல்லிக்கட்டு நடத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சாத்தியப்பட்டது.
ரஜினியை பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு அழைத்த அமர் பிரசாத் ரெட்டி, பா.ஜ.க-வின் மெம்பர் மட்டுமல்ல. தேசிய சைபர் பாதுகாப்பு பிரிவின் ஜெனரல் டைரக்டர் இவர் தான் அமர் பிரசாத் ரெட்டியின் விவரம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் களம்கண்ட அத்தனை இளவட்டங்களும் சமூகவலைதளங்களின் மூலமாக இணைந்தவர்கள். எப்படியாவது இதன் வீரியத்தைக் குறைத்துவிடவேண்டுமென்று பல வகைகளிலும் கையிலெடுக்கப்பட்ட முயற்சிகள் தோற்றுவிடவே இந்த கடிதம் கடைசி நேரத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், சரிவர திட்டம் தீட்டப்படாததால் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்காக நேற்று காலையில், தென் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் திரண்டுவிட முதல்படியாக அந்த இடங்களின் இணையதள சேவையின் வேகம் குறைக்கப்பட்டது. களத்தில் எடுக்கப்பட்ட படங்கள், எங்கு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது? என்ற தகவல்களை பகிர்ந்துகொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர். ஆனால், அனைத்து செயல்களும் முன்பே திட்டமிடப்பட்டதால் பிரச்னைகளின்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றுவிட்டது. அதைத் தடுக்க நினைத்து ரஜினிக்கு எதிராக சரத்குமார் கட்சியினர் உருவபொம்மை எரித்ததும், ரஜினி ரசிகர்கள் சரத்குமாரின் உருவபொம்மையை எரித்ததுமென எந்த விஷயமும் வேகம் குறைவான இணையதள கனெக்‌ஷனால் களத்திலிருந்த யாருக்கும் தெரியாமல் போனது. மதிய வேளைக்கு மேலாகவும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்றுவந்ததால் அந்தந்த இடங்களின் இண்டர்நெட் Bandwidth வேகம் முழுவதுமாக குறைக்கப்பட்டதால், டி.வி-க்களில் ஜல்லிக்கட்டை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த சேனல்களாலும் தங்களது வேலைகளைத் தொடர முடியவில்லை. நிலைமை கட்டுக்குள் வராமல் சென்ற அந்த சமயத்தில் தான் தடியடி நடத்தி காவல்துறை ஜல்லிக்கட்டு வீரர்களையும் காளைகளையும் விரட்டத் தொடங்கினர். கடந்த ஐந்து நாட்களாக எத்தனை முயன்றும் சினிமா நட்சத்திரங்களை முன்வைத்து ஜல்லிக்கட்டை திசைதிருப்ப நடைபெற்ற அத்தனை முயற்சிகளும் படுதோல்வி அடைந்தன.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக