செவ்வாய், 3 ஜனவரி, 2017

ஜெயாவுக்கு நேரம் பார்த்த ஜோதிடர் ஜமால் இப்போ சசிக்கும் நேரம் குறித்து கொடுக்கிறாராம் .

சென்னை : ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் என்று சொன்னவரும்; சில தினங்களிலேயே பெயிலில் வெளியே வருவார் என்றும் முன் கூட்டியே கணித்து சொன்னவர், பிரபல ஜோதிடர் ஜமால். 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 135 இடங்களில் வெற்றி பெறும் என்றும் முன் கூட்டியே கணித்து சொன்னவரும் அவரே. அவரைத்தான், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரையில், ஜோதிடம் தொடர்பாக அதிகம் நம்பியதாகவும், அவரை, அப்பாயின்மெண்ட் இல்லாமல் போயஸ் தோட்டத்துக்கு வந்து செல்லும் அளவுக்கு, ஜெயலலிதா அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார் எனவும் சொல்வார்கள். இப்போது எதற்கு ஜமால் புராணம் என கேட்டால், அந்த ஜமால்தான், இப்போது, சசிகலாவுக்கு ஜோதிடம் பார்த்து ஆரூடம் சொல்கிறார். அவர் குறித்துக் கொடுத்த நாள், நேரம், நட்சத்திரத்தில்தான், கட்சியின் பொதுக் குழுவை சசிகலா கூட்டினார்.   எந்த நேரத்தில் அப்பல்லோவில் சேர்த்தால், சிகிச்சை அளித்தால் , மருந்து கொடுத்தால் போயஸ் கார்ட்டனுக்கு திரும்பி வரமாட்டார் என்றும் இவர்தான் சொல்லி இருப்பாரோ....
பொதுக் குழுவுக்கு நீங்கள் போக வேண்டாம் என சொன்னவரும் ஜமால்தான். அடுத்த கட்டமாக, கட்சியின் பொதுச் செயலராக சசிகலா ஜனவரி 2ல், மாலை 6:30 மணிக்கு பொறுப்பேற்றுக் கொள்ள, நேரம் பார்த்துச் சொன்னவர், 30ம் தேதியே பொறுப்பேற்றுக் கொள்ள மாற்றிச் சொன்னவரும் ஜமால்தான். அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படியே சசிகலா செய்யத் துவங்கி உள்ளார்.

அவர் தற்போதைக்கு முதல்வராக பொறுப்பேற்க வேண்டாம் எனவும் சசிகலாவை அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில், அரசியல் ரீதியில் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் செய்து முடித்து விட்டு, தன்னிடம் சொன்னால், அதற்கேற்ப, பதவியேற்பு விழா நடத்த நாள், நட்சத்திரம் பார்த்து சொல்வதாகக் கூறியுள்ளாராம். இதனாலேயே, சசிகலா முதல்வராவது தள்ளிப் போவதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

போயஸ் தோட்டத்துக்கு ஒவ்வொரு முறை ஜமால் செல்லும்போதும், சூட்கேசுடன் செல்கிறார். அதனால், சூட்கேஸ் ஜோதிடர் என, போயஸ் தோட்டத்துக்கு வெளியே காவலுக்கு நிற்கும் போலீசார் செல்லமாக அழைக்கின்றனர். சசிகலாவின் ஆதரவும் ஜமாலுக்கு இருப்பதால், தற்போதைய பன்னீர்செல்வம் ஆட்சியிலும், ஜமால் கொடி உயரப் பறக்கிறதாம்.  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக