வியாழன், 26 ஜனவரி, 2017

அடையாளம் தெறியாத தனது குழந்தைகளுக்காக வீட்டையே கழிப்பிடமாக மாற்றிய மீனவ தெய்வங்கள்

Image may contain: 3 peopleஅடையாளம் தெறியாத தனது குழந்தைகளுக்காக வீட்டையே கழிப்பிடமாக மாற்றிய மீனவ தெய்வங்களை பார்த்தீரா மானிடரே! சில பெண்கள், காவல் துறையினர்களிடம் சென்று பையோ டாய்லெட்டை உபயோகிக்க அனுமதி கேட்டனர்; மறுத்துவிட்டனர். ‘அதை எடுத்துவந்து இங்கே வைத்துக்கொள்ளலாம்’ என்று எங்களுள் சிலர் முன்னேற... லத்திகளுடன் ஓடி வந்தனர் போலீஸார். வேறு வழியின்றிச் சில பெண்கள் அப்படியே வயிற்றைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்துகொண்டனர். இதைப் பார்த்த மாணவர்கள் உடனே, கடற்கரை மணலில் பெரிய குழிதோண்டி... தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ஷீட்களையும் துணிப் பைகளையும் கிழித்து, கட்டைகள் வைத்து கழிப்பறை கட்டத் தொடங்கினர்.
இதைக் கண்ட மீனவ மக்கள், ‘நாங்க தங்குற குடிசை இருக்கு; பொருட்களை எல்லாம் வெளியே எடுத்துட்டோம்; இதைச் சுத்தி துணியைக் கட்டி கழிவறையா பயன்படுத்திக்கோங்க’ என்றனர். நெகிழ்ந்துவிட்டோம். - ஆனந்த விகடன் 

இந்த மீனவர்கள்தான் இப்போது தங்கள் வாழ்வாதரங்களை இழந்து வீதியில் கிடக்கின்றனர்.அதனாலென்ன வாருங்கள்...நாளை குடியரசை கொண்டாடிக் களிப்போம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக