திங்கள், 30 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு சட்டம் : ஜனாதிபதி ஒப்புதல்!


தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான உரிமையை மீட்க, பல லட்சம் இளைஞர்கள் வரலாறு காணாதவகையில் போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது.
அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டி நிரந்தரமாக நடைபெறுவதற்கு வகைசெய்யும் மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இம் மசோதாவுக்கு ஆளுநர் முதலில் ஒப்புதல் தெரிவித்தார். அதன்பேரில், மத்திய அரசும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதலளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இருந்த அனைத்து முட்டுக்கட்டைகளும் நீக்கப்பட்டுவிட்டன. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஜனாதிபதியின் ஒப்புதல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும். minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக