வியாழன், 19 ஜனவரி, 2017

மதுரை சேலம் ரயில் சிறைப்பிடிக்க பட்டது.. ரயில் மறியல் தொடர்கிறது

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. 3வது நாளாக நடக்கும் இந்த போராட்டம் தற்போது உக்கிரமாக நடந்து வருகிறது. மேலும் போராட்டக்காரர்கள் ரயிலை மறிக்க ஆரம்பத்து உள்ளனர்.
இந்த ரயில் மறியல் போராட்டம் கூட சாதாரண அளவில் இல்லை. மதியம் 2 மணி அளவில் மறிக்கப்பட்ட ரயில்கள் எதுவும் இன்னும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  மதுரை மற்றும் சேலத்தில் ஓடும்  ரயிலையே நிறுத்தி மாணவர்கள் புதிய சகாப்தம் ஏற்படுத்தி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் ரயில் மறியல் தீவிரம் அடைந்துள்ளது.
மேலும் ரயில் மறியல் போராட்டத்தால் தற்போது வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று சென்னை வர வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக